News June 17, 2024
பேரனைக் கொன்ற தாத்தா கைது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஜோதிடத்தை நம்பி, பிஞ்சுக் குழந்தையைக் கொன்ற தாத்தா வீரமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் தாத்தாவின் உயிருக்கு ஆபத்து என்று ஜோதிடர் கூறியிருக்கிறார். அதனை நம்பி, பிறந்து 38 நாள்கள் மட்டுமே ஆன பேரனை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொலை செய்திருக்கிறார் தாத்தா வீரமுத்து.
Similar News
News March 20, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு கைரேகை பதிவு கட்டாயம்!

ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கைவிரல் ரேகையை மார்ச் 25-க்குள் பதிவு செய்ய வேண்டுமென மாவட்ட வாரியாக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால், இதுவரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள், அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று உடனே பணியை முடியுங்கள். இல்லையெனில், ரேஷன் அட்டையில் இருந்து பெயர்கள் நீக்கப்படலாம். ரேஷன் பொருள்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும். SHARE IT
News March 20, 2026
FLASH: தங்கம் விலை பெரியளவில் குறைகிறது

போர்ச் சூழலுக்கு நடுவே இம்மாதத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு சுமார் ₹15,000 வரை குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 சவரன் தற்போது ₹1,11,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மேலும் குறைந்து ₹1 லட்சம் வரை செல்லும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், சுப நிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க இதுவே சிறந்த நேரம். அதேநேரம், அதிகமாக முதலீடு செய்ய வேண்டாம் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
News March 20, 2026
விண்வெளியில் 129 இஸ்ரோ கழிவுகள்

இஸ்ரோ மூலம் ஏவப்பட்ட ராக்கெட்டுகள் மற்றும் செயலிழந்த செயற்கைக்கோள்களின் 129 கழிவுகள் விண்வெளியில் இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இவற்றில் 49 பயனற்ற செயற்கைக்கோள்கள், 40 PSLV துண்டுகள், 4 GSLV துண்டுகள், 3 LVM3 சிதைவுகள், PSLV-C3 ராக்கெட் பாகம் உடைந்ததால் உருவான 33 துண்டுகள் ஆகியவை அடங்கும்.


