News June 17, 2024
படம், வெப் சீரிஸ்களைப் பார்க்க சம்பளம்!

தியேட்டர், ஓடிடியில் கட்டணம் செலுத்தி படம் பார்ப்பது வழக்கம். இதற்கு மாறாக, நிறுவனமொன்று படம் பார்ப்போருக்கு சம்பளம் வழங்குகிறது. நெட்ஃப்ளிக்ஸ் தளம். Creative analyst அல்லது Tagger என்ற பெயரில் ஆட்களைத் தேர்வு செய்கிறது. அவ்வாறு தேர்வு செய்யப்படுவோர், படம், வெப் சீரிஸ்களைப் பார்த்து, தங்களது கருத்துகளை Tag ஆக உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்வோருக்கு நெட்ஃப்ளிக்ஸ் பணம் வழங்குகிறது.
Similar News
News November 14, 2025
சொந்த திறமையால் முன்னுக்கு வர நினைக்கும் ஜேசன்

ஜேசன் சஞ்சய் படிக்கும் போதே, அவரை ஹீரோவாக்க பலரும் முயற்சி செய்ததாக, விஜய்யின் உறவினரும், நடிகருமான விக்ராந்த் தெரிவித்துள்ளார். ஆனால், இயக்குநராகத்தான் சினிமாவில் அறிமுகமாவேன் என்பதில் ஜேசன் சஞ்சய் உறுதியாக இருந்தார். தந்தையின் பெயரை பயன்படுத்தாமல், தனது தனித்திறமையால் சினிமாவில் வெற்றி பெறவே அவர் முயற்சிக்கிறார். இந்த எண்ணமே அவருக்கு வெற்றியை கொடுக்கும் என்றும் விக்ராந்த் கூறியுள்ளார்.
News November 14, 2025
மாணவர்களுக்கு கூடுதல் சிறப்பு வகுப்புகள்

B.Ed, M.Ed படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை முன்கூட்டிய நடத்த ஏதுவாக, கூடுதல் சிறப்பு வகுப்புகள் நடத்தி பாடங்களை முடிக்க கல்வியியல் பல்கலை., உத்தரவிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மேற்கூறிய படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்த காலதாமதமானது. இதனால், நடப்பு கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் 2026 ஜனவரி 9-ம் தேதியில் தொடங்க பல்கலை., திட்டமிட்டுள்ளதால், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News November 14, 2025
‘மின்சார பூவே பெண் பூவே’ கெளரி கிஷன்

உருவக் கேலிக்கு தக்க பதிலடி கொடுத்து ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தவர் கெளரி கிஷன். 96’ படத்திற்கு பிறகு பிரேக் விட்டு படங்களில் நடித்தாலும், SM-ல் அடிக்கடி புகைப்படங்கள் பதிவிடுவதை அவர் தவறவிடுவதில்லை. இந்நிலையில், மிளிரும் மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்து உள்ளார். அந்த புகைப்படங்களை SWIPE செய்து பார்க்கவும்.


