News June 17, 2024
₹10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு ₹10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. பலத்த காயமடைந்தோருக்கு ₹2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ₹50,000 நிவாரணமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இவ்விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Similar News
News March 14, 2026
அதிமுக- தவெக கூட்டணியா? அதிகாரப்பூர்வ விளக்கம்

விஜய்க்கு DCM பதவி, 50+ தொகுதிகள் என்ற அடிப்படையில், அதிமுக கூட்டணியில் <<19375620>>தவெக <<>>இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், மக்கள் பிரச்னைகளிலிருந்து, அனைவரின் கவனத்தையும் திசை திருப்பவே, தவெகவை தொடர்புப்படுத்தி இதுபோன்ற தகவல் வெளியாவதாக CTR கூறியுள்ளார். கட்சி நிகழ்ச்சிகள் உள்பட தலைமை சார்பாக வரும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை மட்டுமே தவெகவினர் பின்பற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
News March 14, 2026
BIG FLASH: ஜப்பான் – வடகொரியா இடையே பதற்றம்

ஜப்பான் கடல் பகுதியில் வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை ஏவியுள்ளதாக ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வமாக தனது X தளத்தில் அறிவித்துள்ளது. ஏற்கெனவே மேற்கு ஆசிய நாடுகளான ஈரான், இஸ்ரேல் இடையே மோதல் நடந்து வரும் நிலையில், தற்போது கிழக்கு ஆசிய நாடுகளான வடகொரியா, ஜப்பான் இடையேயும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
News March 14, 2026
கேஸ் சிலிண்டர் புக்கிங்.. மத்திய அரசு புதிய அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் சிக்கல் இருப்பதாகப் பலரும் SM-ல் புகார் அளித்துள்ளனர். இதனால், LPG கேஸ் விநியோகம் செய்யும் ஏஜென்சிகளின் வாசலில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில், பொதுமக்கள் சிரமமின்றி IOC, BPC, HPC நிறுவனங்களில் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய மத்திய அரசு புதிய எண்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை மேலே உள்ள போட்டோவை SWIPE செய்து பாருங்க.


