News June 17, 2024
இருளில் மூழ்கும் அரசு மருத்துவமனை

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் மின் விசிறி மற்றும் மின் விளக்குகள் எரியாததால் கர்ப்பிணி தாய்மார்கள் அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்ப்பிணி தாய்மார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News July 9, 2025
கள்ளக்குறிச்சி மக்களுக்கு மண்டல இயக்குநர் நல்ல செய்தி

கள்ளக்குறிச்சியில் பண்ணை சாரா கடன், இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கான சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்ப்படுத்தப்பட உள்ளது. இது 9 சதவீத சாதாரண வட்டியுடன் நிலுவை தொகையை, வரும் 2025, செப்., 23ம் தேதிக்குள் ஒரே தவணையில் செலுத்த வேண்டும். தவணை தவறிய கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என மண்டல இணை பதிவாளர் முருகேசன் தகவல் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
போட்டித் தேர்வு முன்னேற்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி IV) முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று (08.07.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு, தேர்வுப் பணிகளைச் சுமுகமாக நடத்துவது குறித்து விவாதித்தனர்.
News July 9, 2025
இரவு நேர ரோந்து பணி விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜூலை 8) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.