News June 17, 2024
தியாகத்திருநாள் சிறக்கட்டும் – கமல்ஹாசன்

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் இன்று(ஜூன் 17) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். “பக்ரீத் கொண்டாடும் சகோதரர்களுக்கு என் அன்பான வாழ்த்துகள். உங்கள் உள்ளம் மகிழ்வால் நிரம்புவதாக , உங்கள் இதயம் நேசத்தால் நிரம்புவதாக , உங்கள் சிந்தை ஞானத்தால் நிரம்புவதாக தியாகத்திருநாள் சிறக்கட்டும் ” என ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Similar News
News March 4, 2026
சென்னையில் ரயில் பெட்டி கண்காட்சி

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலை (ஐசிஎஃப்) வளாகத்தில் மார்ச் 12 முதல் 14 வரை மூன்று நாட்கள் சர்வதேச ரயில் பெட்டி கண்காட்சி நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 125 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ரயில் பெட்டி தயாரிப்பு தொழில்நுட்பம், புதிய மாதிரிகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற உள்ளன.
News March 4, 2026
சென்னை: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1) சென்னை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 044–25342441, 2)தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, 3) Toll Free 1800 4252 441, 4) சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, 5) உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. *மற்றவர்களுக்கு ஷேர் SHARE பண்ணுங்க*
News March 4, 2026
தண்டையார்பேட்டை: மின் பெட்டியை மூட கோரிக்கை

தண்டையார்பேட்டை தாண்டவராயன் தெருவில், மின் பெட்டி திறந்த நிலையில் உள்ளது. திறந்த நிலை மின் பெட்டிக்கு அருகில், தனியார் மருத்துவமனை, வணிக நிறுவனங்கள், அம்மா உணவகம் மற்றும் ATM-கள் உள்ளன. இச்சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் & இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும். அசம்பாவிதம் நிகழும் முன், மின் பெட்டியை மூட கோரிக்கை எழுந்துள்ளது.


