News June 17, 2024
அமெரிக்க EVM குறித்தே எலான் மஸ்க் கருத்து: பாஜக பதிலடி

EVM வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியும் என எலான் மஸ்க் தெரிவித்ததை சுட்டிக்காட்டி, ராகுல் உள்ளிட்டோர் விமர்சித்து வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள பாஜக மூத்த தலைவர் ராஜீவ் சந்திரசேகர், மஸ்க் தெரிவித்தது இந்திய EVM இயந்திரங்களை பற்றி அல்ல, அமெரிக்க இயந்திரங்களை, குறிப்பாக பியூர்டோ ரிக்கோவில் உள்ள இயந்திரங்களை குறிப்பிட்டுதான் கூறியுள்ளார் எனத் தெரிவித்தார்.
Similar News
News March 14, 2026
CM ஸ்டாலின் ₹2,000 கொடுப்பார்: அப்பாவு

வரும் தேர்தலில் திமுக குறைந்தபட்சம் 53% வாக்குகளுடன் வெற்றி பெறும் என அப்பாவு நம்பிக்கை தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர், TN மக்கள் எப்போது தேர்தல் வரும், எப்போது CM ஸ்டாலினுக்கு நன்றிக்கடனாக வாக்களிக்கலாம் என காத்திருக்கிறார்கள் என்றார். மீண்டும் CM ஆக ஸ்டாலின் ஆட்சியில் அமர்வார் என்றும், அப்போது உரிமை தொகையாக ₹1,000 கொடுக்க மாட்டார், ₹2,000 கொடுப்பார் எனவும் கூறினார்.
News March 14, 2026
வீட்டு சிலிண்டர்.. இரவில் வந்த மகிழ்ச்சி அறிவிப்பு

கேஸ் தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தும் மக்களிடம் அச்சம் குறையவில்லை. நேற்று ஒரே நாளில் 75.7 லட்சம் கேஸ் புக்கிங் நடைபெற்றுள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது. சராசரியாக 50 லட்சம் புக்கிங் நடக்கும் நிலையில், இது 30% அதிகம் என கூறியுள்ளது. மேலும், மக்களின் தேவையை பூர்த்தி செய்ய தேவையான அளவு எரிபொருள் இருப்பதாகவும் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.
News March 14, 2026
காலி மதுபாட்டில்கள்.. அரசுக்கு கோர்ட் எச்சரிக்கை

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை TN அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என சென்னை HC உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வழக்கில், டாஸ்மாக் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் இத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்த இயலவில்லை என அரசு வாதிட்டது. ஆனால், திட்டத்தை மே 31-க்குள் அமல்படுத்த வேண்டும். தவறினால் பாட்டிலுக்கு ₹10 அபராதம் விதிக்கப்படும் என்று கோர்ட் எச்சரித்துள்ளது.


