News June 17, 2024

வேலூர் மாவட்டத்தில் இவ்வளவு மழையா?

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 16) பகலில் வெயில் 102.9 டிகிரி கொளுத்திய நிலையில் இரவு திடீரென பலத்த மழை பெய்தது. கே.வி.குப்பத்தில் அதிகபட்சமாக 74.40 மிமீ மழை பதிவானது.  ஒடுகத்தூர் 3.00 மிமீ மழையும், குடியாத்தம் மோர்தனா  13.20 மிமீ, வேலூர் 24.10 மிமீ, காட்பாடி  38.80  மிமீ மழையும் பதிவானது. மாவட்டம் முழுவதுமாக 276 மிமீ மழைப்பொழிவு பதிவானதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Similar News

News March 17, 2026

வேலூர்: உயிரை காக்க whatsapp-ல் ஒரு Hi போதும்!

image

வேலூர் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க

News March 17, 2026

வேலூர்: BE/ B.tech முடித்தால் ரூ.48,000 சம்பளம்!

image

வேலூர் மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்கவாது உதவும்.

News March 17, 2026

‘அரசியல்வாதிக்கு ஓய்வு வயது அவசியம்’ -வேலூரில் அதிரடி!

image

ராஜஸ்தானிலிருந்து நடைபயணமாக வேலூர் வந்த ஜெயின் துறவி கமல்முனி கமலேஷ், தேர்தல் செலவுகளைக் குறைக்க ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை வலியுறுத்தினார். மேலும், அரசு ஊழியர்களைப் போல் அரசியல்வாதிகளுக்கும் ஓய்வு வயதை நிர்ணயிக்க வேண்டும் என்றும், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மக்கள் நலனுக்காகப் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் அவர் பேசினார். வேலூர் ஜெயின் சங்கத்தினர் உடனிருந்தனர்.

error: Content is protected !!