News June 17, 2024

ரயில் விபத்து துரதிஷ்டவசமானது

image

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், எதிர்பாராத விபத்து வடகிழக்கு எல்லை ரயில்வே மண்டலத்தில் நடந்துள்ளதாகவும், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடப்பதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Similar News

News March 16, 2026

ஆணவக் கொலைக்கு எதிராக கர்நாடக அரசின் மசோதா!

image

ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்றும்படி பல ஆண்டுகளாக TN-ல் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி KN பாஷா தலைமையில் ஆணையம் மட்டுமே திமுக அரசால் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஆணவக் கொலையை கடும் குற்றமாக கருதி ’Iva Nammava’ மசோதாவை கர்நாடக அரசு நிறைவேற்றியுள்ளது. ஆணவக் கொலை செய்தோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையை இம்மசோதா பரிந்துரைக்கிறது. இதுகுறித்து உங்க கருத்து என்ன?

News March 16, 2026

தேர்தல் பரப்புரைக்கான டைம் இதுதான்

image

காலை 6 மணி – இரவு 10 மணி வரை மட்டுமே அரசியல் கட்சிகள் பரப்புரை செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இந்த நேரத்தை மீறி பரப்புரை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள அவர், ஆன்லைன் மூலம் மட்டுமே அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் பரப்புரைகளுக்கு அனுமதி கேட்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

News March 16, 2026

அதிமுக கூட்டணியில் இணைந்த இஜபுக!

image

அதிமுக கூட்டணியில் இணைவதாக நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். EPS-ஐ நேரில் சந்தித்த பிறகு பேசிய அவர், வருங்கால முதல்வரை(EPS) சந்தித்துப் பேசியதில் மகிழ்ச்சி என்றார். தேர்தல் பிரசாரத்தில் ஏவுகணைகளும், எறிகுண்டுகளும் பாயும் எனக் கூறினார். மேலும், வரும் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் எனவும் தொகுதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

error: Content is protected !!