News June 17, 2024
கிரிக்கெட் வரலாற்றில் அதிக பவுண்டரிகள் அடித்த 5 வீரர்கள்

இந்திய அணி முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கர் 4,076 பவுண்டரிகள் விளாசி, அதிக பவுண்டரி அடித்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இலங்கை முன்னாள் வீரர் சங்ககரா 3,015 பவுண்டரிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளார். ஆஸி முன்னாள் வீரர் பாண்டிங் (2,781 பவுண்டரி), இலங்கை முன்னாள் வீரர் ஜெயவர்தனே (2,679 பவுண்டரி), இந்திய அணி வீரர் கோலி (2,647 பவுண்டரி) ஆகியோர் 3 முதல் 5 வரையிலான இடங்களை வகிக்கின்றனர்.
Similar News
News March 16, 2026
இந்தியா வந்தடைந்தது LPG கப்பல்

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலுக்கு இடையே LPG எரிவாயுவை ஏற்றி வந்த சிவாலிக் சரக்குக் கப்பல் வெற்றிகரமாக இன்று இந்தியா வந்ததடைந்தது. கத்தாரிலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல், ஆபத்தான ஹார்முஸ் நீரிணையைக் கடந்து இன்று குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. இதனால், நாடு முழுவதும் நிலவி வரும் LPG தட்டுப்பாடு விரைவில் தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News March 16, 2026
IPL 2026: கேப்டன் ஆனார் அபிஷேக் சர்மா!

SRH அணியின் புதிய கேப்டனாக அபிஷேக் சர்மா பொறுப்பேற்க உள்ளார். பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா இடைக்கால கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. T20 WC-ஐ தவறவிட்ட கம்மின்ஸ் முழுமையாக குணமடைய இன்னும் 2 முதல் 3 வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது.
News March 16, 2026
தவெகவினரால் மன உளைச்சல்: ஜூலி

விஜய் கூறிய குட்டிக் கதை குறித்து கருத்து தெரிவித்த ஜூலியை SM-ல் தவெகவினர் தொடர்ச்சியாக திட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தவெக நிர்வாகி உள்பட 8 பேர் மீது ஜூலி புகாரளித்துள்ளார். அதில், தனக்கு கிட்னி மோசடி கும்பலுடன் தொடர்பு உள்ளதாக தவெகவினர் வீடியோ வெளியிட்டதால், மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.


