News June 17, 2024
Youtube தளத்தில் சேனல் தொடங்குவது எப்படி? (2/2)

ஜிமெயில் கணக்கு இல்லாதோர், புதிதாக அதை உருவாக்கிக் கொண்டு Youtube.com தளத்துக்குள் செல்ல வேண்டும். அப்படி சென்றால் செட்டிங்ஸ்சில் மேல்பக்கம் உங்களது கணக்கின்கீழ் “Create a channel” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தை கிளிக் செய்ய வேண்டும். அப்படி செய்தால், சேனல் உருவாகி விடும். அதன்பிறகு சேனலுக்கு பிரத்யேக பெயர், லோகோ வைத்து வீடியோக்களை பகிர்வதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும்.
Similar News
News September 13, 2025
Alert: இன்னும் 2 நாள் தாண்டினால் ₹5000 அபராதம்

ஐடிஆர் (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. ஏற்கெனவே ஜூலை 31-லிருந்து செப்.15 வரை நீட்டிப்பு வழங்கப்பட்டதால், இதற்கு மேல் அவகாசம் வழங்க வாய்ப்பில்லை. எனவே, , கடைசி நேர அவசரத்தைத் தவிர்க்க, அனைவரும் விரைவில் ITR தாக்கல் செய்யுமாறு Income Tax India வலியுறுத்தியுள்ளது. செப்.15-க்குள் ITR தாக்கல் செய்யவில்லை என்றால் ₹5000 வரை அபராதம் விதிக்கப்படும்.
News September 13, 2025
CPI மாநிலச் செயலாளராக வீரபாண்டியன் தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முத்தரசனின் பதவி காலம் நிறைவடைந்ததால், புதிய மாநிலச் செயலாளரை தேர்வு செய்வதற்கான மாநிலக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அதில், மாநில துணைச் செயலாளராக இருந்த மு.வீரபாண்டியனை, மாநிலச் செயலாளராக நியமித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக முத்தரசன் இப்பதவியை வகித்தது குறிப்பிடத்தக்கது.
News September 13, 2025
இனி ஷாம்பு முதல் ஹார்லிக்ஸ் வரை விலை குறைகிறது!

ஜிஎஸ்டி வரம்பு மாற்றத்தை அடுத்து ஹிந்துஸ்தான் யுனிலிவர் தனது பொருள்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. அதன்படி, ஹார்லிக்ஸ், ப்ரூ காப்பித்தூள், டவ் ஷாம்பு, கிசான் ஜாம், லக்ஸ் சோப், லைஃப் பாய் சோப் உள்ளிட்டவற்றின் விலை செப்.22-ம் தேதி முதல் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருள்களின் மாற்றியமைக்கப்பட்ட விலையை மேலே உள்ள போட்டோஸை ஸ்வைப் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.