News June 17, 2024

அனுமதியின்றி போராட்டம் நடத்திய 100 பேர் மீது போலீஸ் வழக்கு

image

இனயம்புத்தன்துறை பகுதியை சேர்ந்த மீனவர் கிறிஸ்டின்ராஜ் (55) மர்ம மரணத்தை புதுக்கடை போலீசார் தற்கொலை வழக்காக பதிந்து விசாரித்தனர். ஆனால் கொலை வழக்காக சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இனயம்புத்தன்துறை மீனவர் கிராமத்தில் அனுமதியின்றி ஜூன் 15ம் தேதி சத்தியாகிரக போராட்டம் நடத்தி 2 பேருந்தை சிறைபிடித்தனர். நேற்று இது தொடர்பாக 100 பேர் மீது புதுக்கடை
போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News March 14, 2026

குமரி: BSNL நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு

image

பொதுத்துறை நிறுவனமான BSNL-ல் 120, Senior Executive Trainee (Telecom and Finance) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E., B.Tech., C.A., C.M.A. படித்த, 21 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாக ₹24,900 – ₹50,500  வரை வழங்கப்படும். தேர்வு_முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல். ஆர்வமுள்ளவர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

News March 14, 2026

JUST IN குமரி: காதலனுடன் சேர்ந்து தாயை கொல்ல முயன்ற மகள்

image

பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்தவர் கலாவதி. இவரது மகள் சுருதி கல்லூரியில் தன்னுடன் படிக்கும் அபிலாஷ் என்பவருடன் பழகியுள்ளார். இந்நிலையில் சுருதி வீட்டில் இருந்த நகையை அபிலாசுக்கு கொடுத்துள்ளார். நகையை கேட்டு மகளிடம் கலாவதி சண்டையிட்டதால் இருவரும் சேர்ந்து கலாவதியின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி செய்தனர். இதுகுறித்து கலாவதி அளித்த புகாரில் 2 பேரையும் சுசீந்திரம் போலீசார் கைது செய்தனர்.

News March 14, 2026

குமரி: கேஸ் குறித்து கலெக்டர் புகார் எண் அறிவிப்பு

image

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் எரிவாயு விநியோகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் ஆட்சியர் கூறியதாவது; குமரி மாவட்டத்தில் கேஸ் தட்டுப்பாடு என்பது இல்லை. இதுதொடர்பான புகார்களை 1077 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். மருத்துவமனை, குழந்தைகள் (ம) பெண்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கு சிலிண்டர் அனுப்புவதில் எவ்வித இடையூறும் இருக்கக் கூடாது என்றார்.

error: Content is protected !!