News June 17, 2024

மதுராந்தகத்தில் 3 இளம்பெண்கள் மாயம்

image

மதுராந்தகம் சின்ன காலனி பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி, கடந்த ஆறு மாதமாக, கூடுவாஞ்சேரி நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 12-ம் தேதி வழக்கம் போல வேலைக்கு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் பெற்றோர் புகார் அளித்தனர். அதேபோன்று மேலும் இரண்டு இளம் பெண்கள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Similar News

News September 27, 2025

தாம்பரம் கமிஷனர் அதிரடி உத்தரவு

image

தாம்பரம் சந்தோஷபுரம் சோதனை சாவடி அருகே செப்.20ம் தேதி எஸ்.ஐ.,வெங்கடேசன், காவலர்கள் ஜலேந்திரன், கதிரேசன் ஆகியோர் வாகன ஓட்டுநர்களிடம் லஞ்சம் வாங்கியுள்ளனர். செப்.23ம் தேதி மேடவாக்கத்தில் போலீசார் திருமுருகன், வெங்கடேசன் ஆகியோர் வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கியுள்ளனர். இவர்கள் 5 பேரை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதிக் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார். (லஞ்சம் கேட்டா 044-2231 0989 CALL பண்ணுங்க)

News September 27, 2025

செங்கல்பட்டு: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/ APPLY NOW

image

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக்<<>> செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920 அழையுங்க. (புதுமண தம்பதிகள் (ம) கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க)

News September 27, 2025

பம்மல்: மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி

image

பல்லாவரம் அடுத்த பம்மலில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடையில் உள்ள சமையல் அறையில் இன்று (செப்.27) காலை மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடையில் பணிபுரிந்த மின் பணியாளர் மணிகண்டன் மற்றும் கடை ஊழியர் பார்த்திபன் ஆகிய இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!