News June 17, 2024
சசிகலா அறிவிப்புக்கு பதிலளிக்காத இபிஎஸ் தரப்பு

மக்களவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்ததால் அதிமுகவில் குழப்பம் நிலவுவதாகக் கூறப்படும் சூழலில், மீண்டும் அரசியலுக்கு வருவதாக சசிகலா அறிவித்துள்ளார். வழக்கமாக சசிகலா, டிடிவியின் பேட்டிகளுக்கு இபிஎஸ் தரப்பில் உடனடியாக பதிலடி கொடுக்கப்படும். ஆனால் இம்முறை பதிலளிக்கப்படவில்லை. அவ்வாறு பதிலளித்தால் குழப்பம் அதிகரிக்குமோ என்று இபிஎஸ் தரப்பு நினைக்கிறதா? என்ற எண்ணம் அக்கட்சியினர் இடையே ஏற்பட்டுள்ளது.
Similar News
News March 16, 2026
வங்கி கணக்கில் ₹12,000.. தமிழக அரசு கொடுத்த GOOD NEWS

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான திறன் படிப்புதவித் திட்ட தேர்வு(NMMS) ஜன.10 -ல் நடைபெற்றது. இதில், தேர்வானவர்களின் பட்டியலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் Other Examination பகுதியில் சென்று பட்டியலை காணலாம். தேர்வாகியுள்ள மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹12,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு *₹48,000 உதவித்தொகை வழங்கப்படும்.
News March 16, 2026
உலக சாம்பியன்களை பாராட்டிய CM ஸ்டாலின்

T20I WC-ஐ தொடர்ந்து 2-வது முறையாக வென்று சாதனை படைத்த இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி & வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். அவர்கள் இருவரையும் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து CM ஸ்டாலின் பாராட்டியுள்ளார். அப்போது T20I அணியின் ஜெர்சி & தொப்பியை CM-க்கு இருவரும் பரிசளித்தனர். இந்த சந்திப்பின் போது, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியும் உடனிருந்தார்.
News March 16, 2026
கஞ்சா விற்பனையால் பாலியல் தாக்குதல்: அண்ணாமலை

திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில், TN முழுவதும் கஞ்சா புழக்கம் பெருகியுள்ளதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன் சேலம் கோரிமேட்டில் 66 வயது மூதாட்டியை, கஞ்சா போதையில் 2 பேர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கும் சம்பவத்தை அதிர்ச்சியுடன் சுட்டிக்காட்டியுள்ளார். கஞ்சா விற்பனையில் பெரும்பாலும் திமுகவினரே ஈடுபடும் நிலையில் உடனடியாக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் கோரியுள்ளார்.


