News June 17, 2024

தரையில் அமர வைக்கப்பட்ட பவித்ரா கவுடா

image

ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர்கள் தர்ஷன், பவித்ரா கவுடா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பவித்ரா மட்டும் பகலில் காவல் நிலையத்திலும் இரவில் மகளிர் விடுதியிலும் தங்க வைக்கப்படுகிறார். ஆனால், தினமும் காலை 7 மணிக்கு மேல் அவர் தாமதமாக வருவதால் மேஜையை போலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால், தண்டனையாக அவர் தரையில் அமர வைக்கப்பட்டுள்ளார்.

Similar News

News March 18, 2026

தங்கம் விலை தாறுமாறாக மாறியது

image

சர்வதேச சந்தையில் தொடர்ந்து சரிந்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் தங்கம் $9 உயர்ந்து $5,005-க்கு விற்பனையாகிறது. ஆனால், வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் $1 குறைந்து $79-ஆக உள்ளது. சென்னையில், தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹480 குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர வாய்ப்புள்ளது.

News March 18, 2026

2-ம் கட்ட வேட்பாளர்கள் தேர்வில் தவெக தீவிரம்

image

சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நிலையில், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தவெக தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கெனவே முதற்கட்ட வேட்பாளர்களுக்கான நேர்காணலை விஜய் முடித்த நிலையில், 60 வேட்பாளர்கள் அதில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்தாக 2-ம் கட்ட நேர்காணல் நேற்று நடத்து முடிந்ததையடுத்து அடுத்த பட்டியலை தேர்வு செய்யும் பணியில் தவெக ஈடுபட்டுள்ளது.

News March 18, 2026

புதியவர்களால் EPS-க்கு அச்சம் வந்துவிட்டது; ரகுபதி

image

தனது பொதுச்செயலாளர் பதவியை தக்க வைத்து கொள்வது மட்டுமே EPS-ன் ஒரே இலக்கு என அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எனற எண்ணம் EPS-க்கு இல்லை என்றும் நிறைய புதிய போட்டியாளர்கள் வந்திருப்பதால் எதிர்க்கட்சி தலைவர் பதவி இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவருக்கு வந்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தைகூட சரியாக நடத்த முடியாமல் தோல்வி கண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!