News June 17, 2024
விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துச் செய்தி

குமரி எம்.பி. விஜய்வசந்த் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துச் செய்தியில்
, “முஸ்லிம் உறவுகள் அனைவருக்கும் இனிய பக்ரீத் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஈகை குணம் இந்த உலகம் முழுவதும் பரவ வேண்டுகிறேன். இந்த நாள் தியாகத்தின் மேன்மையையும், ஈதலின் அழகையும் நமக்கு கற்று தருகிறது. அல்லாவின் திவ்ய ஒளி உங்கள் மீது பிரகாசித்து, நன்னெறி பாதையில் வழி நடத்தட்டும். “என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 12, 2026
குமரி: இனி PAN கார்டு தேவையில்லை..மத்திய அரசு

வீடு,மனை போன்ற 10 லட்சத்திற்கு மேற்பட்ட சொத்துக்களை பதிவு செய்யும் போது பான் எண் கட்டாயம் என தற்போது உள்ளது. இந்நிலையில்,ரூ.20 லட்சம் வரை சொத்துக்கள் வாங்கினால்,இனி பான் எண் கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, ரூ.20 லட்சம் வரையிலான சொத்துக்களுக்கு பத்திரபதிவின் போது பான் எண் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.இது வரும் ஏப்.1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 12, 2026
குமரி: பத்மநாபபுரம் தொகுதியில் முந்துவது யார்?

குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது . அமைச்சர் மனோ தங்கராஜின் தொகுதியான இது, கடந்த 2006 முதல் திமுகவின் வசம் உள்ளது. அதேசமயம், இத்தொகுதியில் கணிசமான வாக்குகளை கொண்டுள்ள பாஜக, தமிழக சட்டமன்ற வரலாற்றில் 1996 தேர்தலில் முதலில் கால்பதித்து இங்குதான். இந்த முறை அதிமுக-பாஜக கைகோர்த்திருக்கும் சூழலில், தவெகவும் களமிறங்குவது வெற்றி யாருக்கு என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
News March 12, 2026
குமரி: தொழிலாளி நீரில் மூழ்கி பலி

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சிதறால், துண்டத்துவிளை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் சிப்பி எடுக்க சென்ற கூலி தொழிலாளி ஜஸ்டஸ்குமார் நேற்று முன்தினம் இரவு மாயமானார். இந்நிலையில் நேற்று காலை முதல் குழித்தை தீயணைப்பு துறையினர், அருமனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், ஜஸ்டஸ்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


