News June 17, 2024
விழுப்புரத்தில் பக்ரீத் கொண்டாட்டம்

நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஏராளமான இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் நகராட்சி பள்ளி மைதானத்தில் திரளாக தொழுகையில் கலந்து கொண்டனர். இஸ்லாமியர்கள் தொழுகை முடித்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
Similar News
News July 7, 2025
விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டம்

வரும் ஜூலை 9, 2025 அன்று, நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மாதர் சங்கம், மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. புதன்கிழமை காலை 10 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் தவிச மாநில தலைவர் ரவீந்திரன் தலைமையில் இப்போராட்டம் நடைபெறும்.
News July 7, 2025
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகள் திறப்பு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் கீழ் புத்துப்பட்டு ஊராட்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 440 வீடுகளை இன்று முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், மு.அமைச்சருமான செஞ்சி மஸ்தான் குத்துவிளக்கு ஏற்றி பயனாளிகளிடம் புதிய வீட்டினை ஒப்படைத்தார் .உடன் மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் எம்பி உள்ளிட்டோர் இருந்தனர்.
News July 7, 2025
திண்டிவனம் அரசு கல்லூரியில் மயிலம் எம்எல்ஏ ஆய்வு

திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இட ஒதுக்கீட்டினை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா என்று இன்று (ஜூலை 7) மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக கூறினார். உடன் கல்லூரி முதல்வர் போரசியார்கள், இருந்தனர்.