News June 17, 2024

‘தாரே ஜமீன் பர்-2’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

image

சூப்பர் ஹிட்டான ‘தாரே ஜமீன் பர்’ படத்தின் 2ஆம் பாகமாக உருவாகி வரும் ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியுள்ள இப்படத்தில் அமீர்கானுக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்துள்ளார். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News March 13, 2026

56 வயதில் 22 மனைவிகள்.. பலே ஆசாமி

image

கேரளாவில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட பாகுலேயன்(56) என்பவர் போலீசிடம் சிக்கியபோது, அவர் 22 பெண்களை திருமணம் செய்து மோசடி மன்னனாக வாழ்ந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருவரை திருமணம் செய்திருந்த பாகுலேயன், மனைவிகளுக்கு நகை வாங்கி கொடுத்து திருப்திப்படுத்த திருட்டில் ஈடுபட்டராம். பல பெயர்களில் பல பெண்களை ஏமாற்றி அவர் திருமணம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இவரை என்ன சொல்வது?

News March 13, 2026

84 ஈரானிய மாலுமிகளின் உடல்கள் ஒப்படைப்பு

image

இந்திய பெருங்கடலில் சென்ற <<19303157>> ஈரான் போர் கப்பலை<<>> அமெரிக்கா தாக்கி மூழ்கடித்தது. இதில் 84 மாலுமிகள் உயிரிழந்த நிலையில், 32 பேர் இலங்கை கடற்படையால் பத்திரமாக மீட்கப்பட்டனர். 60 பேரின் நிலை பற்றி இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் 84 பேரின் உடல்களை ஈரான் தூதரகத்திடம் இலங்கை ஒப்படைத்துள்ளது. சிறப்பு விமானங்கள் மூலம் அவர்களின் உடல்கள் ஈரான் கொண்டு செல்லப்பட உள்ளன.

News March 13, 2026

கனிமொழியை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி: EPS

image

தூத்துக்குடியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சிறுமியின் உறவினர்கள் திமுகவின் சாக்கு போக்குகளை நம்பத் தயாராக இல்லை என EPS சாடியுள்ளார். <<19370719>>கனிமொழியை <<>> அச்சிறுமியின் உறவினர்கள் விரட்டி அனுப்பியதே இதற்கு சாட்சி எனவும் கூறியுள்ளார். பெண்களின் பாதுகாப்பை நிர்கதியாக்கிய திமுக அரசுக்கு முடிவுரை கட்டப் போகும் மாபெரும் <<19364920>>போராட்டத்தை <<>> NDA கூட்டணி நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!