News June 17, 2024
நடிகர் தர்ஷன் கண்முன்னே கொடூரம்

ரேணுகாசாமியை கொலையாளிகள் சித்திரவதை செய்தபோது நடிகர் தர்ஷன் அங்குதான் இருந்ததாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தர்ஷனின் தோழியான பவித்ரா கவுடாவுக்கு ரேணுகாசாமி ஆபாச ஃபோட்டோக்கள் அனுப்பி தொல்லை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் வகையில், அவரைக் கடத்திய தர்ஷனும் அவரது கூட்டாளிகளும் பிறப்புறுப்பில் மின்சாரம் பாய்ச்சி சித்தரவதை செய்து கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
Similar News
News March 18, 2026
திருமணம் செய்யாமல் உறவு.. தமிழ் நடிகை விருப்பம்

திருமணம் செய்துகொள்ளாமல் உறவில் இருப்பதே நல்லது எனவும் அதையே தான் விரும்புவதாகவும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். வாழ்க்கைத் துணை வேண்டும் என்பது உண்மை தான்; ஆனால், சேர்ந்து வாழும்போது இருவருக்குமே நிம்மதி இல்லாத ஒரு நிலை வரக்கூடாது. அண்மைக் காலமாக திரையுலகில் பலரும் விவாகரத்து பெற்று வரும் நிலையில், ஐஸ்வர்யாவின் இந்த கருத்து SM-ல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் கருத்து என்ன?
News March 18, 2026
FLASH: விசிக தொகுதிப் பங்கீடு இன்று இறுதியாகிறது!

<<19413921>>திமுகவில் 6 கட்சிகளுக்கு<<>> தொகுதிப் பங்கீடு இறுதியான நிலையில், இன்று மாலை ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 4-ல் வென்றது. இம்முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் என திருமாவளவன் நெருக்கடி கொடுத்து வருகிறார். அதனால் தான் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது.
News March 18, 2026
அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. புதிய அறிவிப்பு

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு பெரிய வசதியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் UMANG App-ல், இப்போது ‘மேரா ரேஷன்’ என்ற அம்சத்தை மத்திய அரசு சேர்த்துள்ளது. இதன் மூலம் ரேஷன் அட்டை தொடர்பான எந்தவொரு பணிக்காகவும் அரசு அலுவலகங்களுக்கோ, ரேஷன் கடைகளுக்கோ செல்வதற்கு பதிலாக, உமாங் செயலி மூலம் உங்கள் மொபைல் போனிலேயே ரேஷன் சேவைகளை பெறலாம்.


