News June 17, 2024

T20 WC: 106 ரன்னில் சுருண்ட வங்கதேசம்

image

வங்கதேச அணிக்கு எதிரான உலகக் கோப்பை டி20 போட்டியில் நேபாள அணிக்கு 107 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் களமிறங்கிய வங்கதேசம், நேபாள அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது. அந்த அணியின் ஷாகிப் அல் ஹசன் மட்டுமே அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் வெற்றிபெற்றால் வங்கதேசம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 13, 2025

‘நான் தான் CM’ பார்த்திபனின் அரசியல் அவதாரம்

image

இன்று மாலை 4.46-க்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு வரப்போகிறதாக, நடிகர் பார்த்திபன் ஒரு பதிவை போட்டு அனைவரையும் பரபரபாக்கினார். என்னவா இருக்குமென பலரும் காத்திருந்த நிலையில், ‘நான் தான் CM’ என்ற படத்தின் அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதில் ‘C.M. சிங்காரவேலன் எனும் நான்…. சோத்துக் கட்சி’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பார்த்திபனின் டிரேட் மார்க் ஸ்டெயில் பப்ளிசிட்டி இது.

News September 13, 2025

இந்தியாவை வெல்ல முடியும்: பாக்., கேப்டன் சூசகம்

image

ஆசிய கோப்பை தொடரில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் IND vs PAK போட்டி நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாக்., கேப்டன் சல்மான் அலி அகா, இதேபோல் திட்டமிட்டப்படி தொடர்ந்து செயல்பட்டால் எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என மறைமுகமாக இந்தியாவை குறிப்பிட்டுள்ளார். இதனால், இப்போட்டி மேலும் கவனம் ஈர்த்துள்ளது. பஹல்காம் தாக்குதலை கருத்தில்கொண்டு, இப்போட்டியை ரத்து செய்ய சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.

News September 13, 2025

திமுகவுக்கு 13 மார்க்: அன்புமணி ரேட்டிங்

image

550 வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, வெறும் 66 வாக்குறுதிகளை மட்டுமே திமுக நிறைவேற்றியுள்ளதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். இதை கணக்கில் கொண்டால், அதற்கு வெறும் 13 மார்க் தான் என்ற அவர், இதனால் திமுக அரசு ஃபெயில் ஆகிவிட்டதாகவும் சாடியுள்ளார். முன்னதாக, அன்புமணி வெளியிட்டிருந்த ‘விடியல் எங்கே’ புத்தகத்தில் வேலைவாய்ப்புகள், மாதந்தோறும் மின் கணக்கீடு போன்றவை நிறைவேற்றப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!