News June 17, 2024

விக்கிரவாண்டியில் மும்முனைப் போட்டி

image

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் போட்டியில்லை என்று அறிவித்திருப்பதால் இது மும்முனைப் போட்டியாக மாறியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் என நான்குமுனை போட்டி ஏற்பட்டது. ஆனால், இம்முறை திமுக, பாமக (பாஜக கூட்டணி), நாம் தமிழர் என மூன்று கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன.

Similar News

News March 13, 2026

இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி!

image

ஹார்​முஸ் நீரிணையில் நிலவும் ஈரானின் தாக்குதலால், பல எண்ணெய் கப்​பல்​கள் இந்​தியா வரு​வ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. இதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை எடுத்துக்கூறி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்​சங்​கர் மற்றும் <<19367934>>PM மோடி ஈரான் அரசுடன் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை<<>> நடத்தினர். அதன் பலனாக இந்​தி​ய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல ஈரான் அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது.

News March 13, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 631 ▶குறள்: கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. ▶பொருள்: உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.

News March 13, 2026

அந்த கொடூரர்களுக்கு மரண தண்டனை வேண்டும்: சீமான்

image

பள்ளி சிறுமிகள் முதல் பாட்டிகள் வரை பலரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது தினமும் அரங்கேறுகிறது என சீமான் வேதனை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் TN-ல் பாலியல் வன்கொடுமை நிகழாத நாளே இல்லை என்றும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற பேராபத்தான சூழல் நிலவுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்யும் இத்தகைய கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!