News June 17, 2024
நானி படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது

‘ஈ’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் நானி. விவேக் ஆத்ரேயே இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ திரைப்படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.
Similar News
News March 15, 2026
நகைக் கடன் தள்ளுபடி.. முக்கிய தகவல் வெளியானது

தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, திமுகவின் தேர்தல் அறிக்கையை இறுதி செய்வதற்கான பணியும் வேகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை தொடர்பாக கனிமொழி உள்ளிட்டோர் சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர். அதில், மகளிர் வாக்கை குறிவைத்து 2021 போலவே 2026-லும் நகைக் கடன் தள்ளுபடி, மகளிர் உரிமைத் தொகை உயர்வு, இளைஞர்களுக்கான சிறப்பு திட்டம் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாம்.
News March 15, 2026
எங்கள் வேதனையை புரிந்து கொள்ள வேண்டும்: காங்.,

காங்.,க்கு ஏன் கூடுதல் தொகுதிகள் கொடுத்தீர்கள் என்று கூட்டணி கட்சிகள் கேட்டால் எப்படி என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். தங்கள் வேதனையை தோழமை கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏனென்றால், முதலில் 110 தொகுதிகளில் காங்., நின்றது. பின்னர் அது 63 ஆனது. இதனையடுத்து 25, தற்போது 28 தொகுதிகளை ஏற்றது என்பது தமிழக மண்ணைக் காக்கவே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 15, 2026
அதிமுக கூட்டணியில் விஜய்.. வெளியான புது பரபரப்பு

NDA கூட்டணியில் விஜய்யை <<19387664>>இணைப்பதற்கான <<>>பேச்சுவார்த்தை தீவிரபடுத்தப்பட்டுள்ளதாம். 80 தொகுதி, துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற பாஜகவின் ஆஃபருக்கு தவெக 2-ம் கட்ட தலைவர்கள் சம்மதம் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், தவெகவின் KAS, ஆதவ் போன்றவர்களுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. ஓரிரு நாளில் கூட்டணி குறித்த முடிவு எட்டப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


