News June 17, 2024

ராகுல் காந்தி இன்று ராஜினாமா செய்கிறார்?

image

மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டிலும் வெற்றி பெற்றார். நாடாளுமன்ற விதிகளின் படி தேர்தல் முடிவுகள் வெளியான 14 நாட்களுக்குள் ராஜினாமா செய்ய வேண்டும். ஜூன் 4இல் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஜூன் 18-க்குள் ராஜினாமா செய்ய வேண்டும். இந்நிலையில், இன்று (அ) நாளை அவர் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News March 4, 2026

80 லட்சம் இந்திய WhatsApp கணக்குகள் நீக்கம்!

image

WhatsApp முக்கிய மார்க்கெட்டாக இருக்கும் இந்தியாவில் சுமார் 81,79,740 கணக்குகளை முடக்கி இருப்பதாக WhatsApp நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. WhatsApp பயனர்களின் புகார்கள், இந்திய அரசின் அறிவுறுத்தல்கள் & விதிமீறல்கள் ஆகியவற்றுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.

News March 4, 2026

பச்சை துண்டுடன் களமிறங்கிய விஜய்

image

தஞ்சையில் நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பச்சை துண்டு அணிந்தபடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், வரும் தேர்தல் ஏன் TN-க்கும், டெல்லிக்குமான தேர்தல் என கேட்டதற்கு, விஜய் பாஜகவுக்காக பேசுவதாக திரித்து பேச தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். சிறுபான்மையை பயமுறுத்தி செய்யும் ஏமாற்றும் வேலையை இனி செய்யமுடியாது என தெரிந்ததால் தனது பேச்சை திரித்து பேசி தில்லு முல்லு செய்வதாகவும் விமர்சித்துள்ளார்.

News March 4, 2026

தமிழ்நாடே திவால் ஆகப்போகிறது: விஜய்

image

TN-ல் இன்னும் கொஞ்ச காலத்தில் தண்ணீர் இல்லாமல் திவால் ஆகப் போவதாக செய்தி வந்துள்ளது என விஜய் கூறியுள்ளார். மணலைக் கொள்ளையடித்தால் வேற என்ன நடக்கும், மலைகளை முழுங்கினால் வேற என்ன நடக்கும் என கேள்வி எழுப்பிய அவர், மணல் மாஃபியாவுடன் திமுகவுக்கு உறவில்லை என்று சொல்ல முடியுமா என கேட்டுள்ளார். மேலும், ஒட்டுமொத்தமாக இந்த முதல்வரின் ஆட்சியில் தமிழ்நாடே திவால் ஆகப் போகிறது என கூறியுள்ளார்.

error: Content is protected !!