News June 17, 2024
குத்துச்சண்டை: வெள்ளி வென்ற லவ்லினா போர்கோஹைன்

செக்குடியரசின் கிராண்ட் பிரிக்ஸ் குத்துச்சண்டை தொடரில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் (26) வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். பிராக் நகரில் நடந்த பெண்களுக்கான 75 கிலோ பிரிவின் இறுதிச்சுற்றில் லவ்லினா, சீனாவின் லி கியானுடன் மோதினார். வெற்றிக்காக போராடிய லவ்லினா, 2-3 என்ற கணக்கில் கியானிடம் தோல்வியடைந்து, 2ஆம் இடத்தைப் பிடித்து, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
Similar News
News November 14, 2025
யோசித்து கூட பார்க்காத வகையில் தண்டனை: அமித்ஷா

டெல்லி கார் குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். இனி இது போன்ற சம்பவத்தை செய்ய வேண்டும் என யாரும் எண்ணாத வகையில், அந்த தண்டனை மிகக்கடுமையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தீவிரவாதத்தை ஒருபோதும் இந்தியா சகித்து கொள்ளாது என்பதை உலகிற்கு உணர்த்தும் செய்தியாக அது இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
வாக்கு எண்ணிக்கையை தாமதப்படுத்த சதி: தேஜஸ்வி

பிஹாரில் இன்றைய வாக்கு எண்ணிக்கையை தாமதப்படுத்த சதி நடப்பதாக தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளின் வெற்றியை அறிவிப்பதை தாமதப்படுத்தி, NDA கூட்டணி வெற்றியை முதலில் அறிவிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் சாடியுள்ளார். மேலும், எதிர்க்கட்சிகள் தான் ஆட்சியை பிடிக்கும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


