News June 17, 2024

80,000 இடங்கள் நிரப்ப திணறும் டி.சி.எஸ்.,

image

திறன் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் 80,000 காலி பணியிடங்களை நிரப்ப முடியாமல் டி.சி.எஸ்., தடுமாறி வருகிறது. டி.சி.எஸ்., மட்டுமல்லாமல் பிற ஐ.டி., நிறுவனங்களிலும் இதே நிலை தொடர்வதாகக் கூறப்படுகிறது. டி.சி.எஸ்.,ஸின் ஆர்.எம்.ஜி., பிரிவின் உலகளாவிய செயல்பாட்டுத் தலைவர் அமர் ஷெட்டி, தற்போதைய பணியாளர்களின் திறனுக்கும், தேவைப்படும் திறனுக்கும் இடையே இடைவெளி இருப்பதாகக் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

Similar News

News March 14, 2026

சமையல் எண்ணெய் விலை உயர்ந்தது!

image

போர் சூழல் காரணாக சமையல் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ₹110-க்கு விற்பனையான 1 லிட்டர் பாமாயில் தற்போது ₹122 ஆக உயர்ந்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் ₹155லிருந்து ₹175 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விலையும் லிட்டருக்கு ₹5 வரை உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News March 14, 2026

ஈரானின் கிரீடத்தில் மிகப்பெரிய தாக்குதல்

image

மத்திய கிழக்கு வரலாற்றில் ஈரானின் கிரீடமாக கருதப்படும் கார்க் தீவில் சக்திவாய்ந்த குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். கார்க் தீவில் உள்ள ஈரானின் ராணுவ நிலைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டதாக கூறிய அவர், அங்குள்ள எண்ணெய் கட்டமைப்பை அழிக்க விரும்பவில்லை; ஆனால், கப்பல்கள் செல்வது தடுக்கப்பட்டால், அதையும் அழிப்பேன் என்று எச்சரித்துள்ளார்.

News March 14, 2026

அதிமுகவை பாஜக கபளீகரம் செய்யும்: உதயநிதி

image

பிஹாரில் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலையே EPS-க்கும் ஏற்படும் என உதயநிதி கூறியுள்ளார். 10 முறை CM ஆக இருந்த நிதிஷ்குமாரையே தற்போது ராஜ்யசபா MP ஆக மாற்றி, அம்மாநில ஆட்சியை பாஜக தன்வசமாக்கிவிட்டது என்ற அவர், இதேபோல் தான், 2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்று குறிப்பிட்டார்.

error: Content is protected !!