News June 17, 2024

T20 WC: அயர்லாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் அணி

image

டி20 உலகக் கோப்பை தொடரின் 36ஆவது லீக் போட்டியில், IRE அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, PAK அணி வென்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த IRE அணி 20 ஓவர்கள் முடிவில், 106 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய PAK அணி, அடுத்ததடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், பொறுமையாக விளையாடி இறுதியில் 111 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

Similar News

News April 7, 2026

காலில் விழுவது தமிழர் மரபு: EPS

image

EPS காலை தேடினார் என உதயநிதி விமர்சித்திருந்தார். இந்நிலையில், காலில் விழுந்து ஆசி பெறுவது தமிழர் மரபு என EPS விளக்கமளித்துள்ளார். திருமணம் முடிந்த தம்பதி பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவது போல்தான், ஒரு உயர் பொறுப்பு கொடுக்கப்பட்டபோது காலில் விழுந்ததாக கூறிய அவர், உதயநிதி ஆணவமாக பேசி, தரையில் நடக்காமல் தலைக்கணத்துடன் நடப்பதாகவும் விமர்சித்தார்.

News April 7, 2026

நடிகை சுபாஷினி மரணம்.. அதிர்ச்சியூட்டும் தகவல்

image

சென்னையில் ஷூட்டிங்கிற்காக தங்கியிருந்த <<19578782>>நடிகை சுபாஷினியின்(36)<<>> தற்கொலை விவகாரத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. சுபாஷினி நடிப்பதை அவரது கணவர் பிபின் விரும்பவில்லையாம். இது தொடர்பாக நேற்று வீடியோ காலில் பேசும்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, பிபின், சுபாஷினியை அவதூறாகப் பேசியதால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்தாக கூறப்படுகிறது. எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது.

News April 7, 2026

நான் தொழிலதிபராவேன்.. டிரம்ப் சொல்லும் காரணம்

image

தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் நான் ஈரானின் எண்ணெய் வளங்களை கைப்பற்றுவேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏனென்றால், நான் ஏற்கெனவே ஒரு தொழிலதிபர். எனவே, எண்ணெய் வளங்களை கைப்பற்றி தொழிலை பெருக்குவேன், இது முன்னதாக வெனிசுலாவில் செய்தது தான் என்றும் கூறியுள்ளார். போரில் வெல்பவருக்கே பரிசு (எண்ணெய்) கிடைக்கும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!