News June 16, 2024
சென்னையில் கனமழை

சென்னை மாநகர் மற்றும் புறநகரில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் நந்தனம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, தரமணி, பல்லாவரம், பூந்தமல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதேபோல, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
Similar News
News March 20, 2026
திருச்சி: கொலை வழக்கு – 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

புத்தாநத்தம் பகுதியில் பிரபாகரன் என்பவர் மதுபோதையில் அவரது மனைவியை அடித்து, துன்புறுத்துவதாக அவரது மனைவி அபிராமி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபிராமியின் உறவினர் பிரபு, கூட்டாளி சரவணனுடன் சேர்ந்து பிரபாகரனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்நிலையில் சிறையில் இருந்து வரும் இருவரையும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி மாவட்ட எஸ்.பி பரிந்துரைத்துள்ளார்.
News March 20, 2026
ராம்நாடு: 10 மீனவர்களின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

கடந்த பிப்.19-ல் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 10 பேரை இலங்கை அரசு கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தது. வாய்தா நாளான நேற்று, 10 மீனவர்களை வளைகுடா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதில் மண்டபம் மீனவர்களுக்கு ஏப்.2-வரை எனவும், இராமேஸ்வரம் மீனவர்களுக்கு மார்ச் 26 வரை காவல் நீடிப்பு என உத்தரவிட்டு மீண்டும் வவுனியா சிறையில் அடைத்தனர்.