News June 16, 2024
சேலம் மாவட்டத்தின் இன்றைய வெப்பம்

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன்.16) மாவட்டத்தில் அதிகபட்சமாக 97.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. எடப்பாடி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
Similar News
News November 9, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம் எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், தலைவாசல், வீரபாண்டி, சேலம் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினரை இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் ரோந்து பணியில் அமர்த்துவது வழக்கம். அதன்படி இன்று (நவ. 09) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
News November 9, 2025
வாழப்பாடி: 17 வயது சிறுமி காணாமல் போனதால் பரபரப்பு!

வாழப்பாடி: கொட்டவாடியை சேர்ந்த 17 வயது சிறுமி காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்தும் உறிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் நேற்று கொட்டவாடியில் அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏத்தாப்பூர் போலீசார் பேச்சு நடத்தி, சிறுமியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உறுதி அளித்தனர். பின் அனைவரும் கலைந்து சென்றனர்
News November 9, 2025
ஆயுள் சான்றிதழை தபால் அலுவலகம் மூலம் பெற வசதி!

தபால் துறை, தபால் கட்டண வங்கி ஆகியவை இணைந்து ஓய்வூ தியர்கள் ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் பதிவு செய்வ தற்கான முகாம் 31-ந்தேதி வரை தபால் அலுவலகங்களில் நடக்கிறது. இவ்வாறு பதிவு செய்யும் போது எந்த தபால் அலுவலகங்களிலும் ஆதார் அடிப்ப டையிலான சான்றிதழ்கள் எளிதில் பெறலாம். இந்த தகவல் சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


