News June 16, 2024
நீட்டை ஒழிப்பதே எங்களின் நோக்கம்

மாணவர்களின் மருத்துவக் கனவுகளை சிதைக்கும் நீட் தேர்வை முழுமையாக ஒழிப்பதே எங்களின் நோக்கம் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதுவரை தமிழகம் மட்டும் நீட்-க்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது உ.பி., மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் எதிர்ப்பு தொடங்கியுள்ளன.
Similar News
News March 3, 2026
திமுக சின்னத்தில் போட்டி.. கமலுக்கு 5 சீட் கிடைக்குமா?

டார்ச் லைட் சின்னம் பெற்ற நிலையிலும், உதய சூரியன் சின்னத்திலேயே வரும் தேர்தலில் போட்டியிட மநீம முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 4-5 சீட்களை மநீம எதிர்பார்க்கிறதாம். விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி சீட் உறுதி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 2024 லோக்சபா தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தியதை கமல் ஏற்கவில்லை என கூறப்பட்டது.
News March 3, 2026
திடீர் பாதுகாவலர் வேஷம் போடும் திமுக: TTV

சிறப்பு நிதி எனும் திமுகவின் தேர்தல் கால சித்து விளையாட்டுகள் மக்களிடம் எடுபடாது என TTV விமர்சித்துள்ளார். மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தக்கோரி, ஜனநாயக ரீதியில் போராடிய மாற்றுத்திறனாளிகளின் மீது திமுக அரசு காவல்துறையை ஏவி அடக்குமுறை செய்தது. ஆனால் தற்போது தேர்தல் நேரத்தில் திடீர் பாதுகாவலர் வேஷம் போடும் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் முடிவிலிருந்து மக்கள் பின்வாங்க மாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.
News March 3, 2026
CSK-வின் பவுலிங் கோச் அஸ்வினா?

சென்னை அணியில் தனது IPL பயணத்தை தொடங்கிய அஸ்வின் கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்தார். இந்நிலையில், CSK நிர்வாகம் அஸ்வினின் போட்டோவை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டு, யார் என்று கண்டுபிடியுங்கள் என கேட்டுள்ளது. இதனால் அவர் CSK-வின் பவுலிங் கோச்சாக நியமிக்கப்பட இருக்கலாம் என்ற செய்தி தீ போல் பரவி வருகிறது. முன்னதாக CSK அகடாமியின் முக்கிய பொறுப்பில் அவர் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


