News June 16, 2024
மத்திய பிரதேசத்தில் மீட்கப்பட்ட 39 சிறுவர்கள் மாயம்

ம.பி மாநிலத்தில் உள்ள ஒரு மதுபான ஆலையில் இருந்து 39 குழந்தை தொழிலாளர்களை நேற்று தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் மீட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்றும், அவர்களின் உடலில் தீ காயங்கள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 39 பேரையும் காணவில்லை என்றும், அவர்கள் கடத்தப்பட்டனரா என்ற கோணத்தில் விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 14, 2025
உழைப்பால் கிடப்பதே வெற்றி.. அஜித்தை புகழ்ந்த சூரி

அஜித்துடனான சந்திப்பு குறித்து நெகிழ்ச்சியாக தனது X தள பக்கத்தில் சூரி பகிர்ந்துள்ளார். அதில், ‘அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது, உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல; அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது. அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது என பதிவிட்டுள்ளார். சூரியின் இந்த பதிவுக்கு அஜித் ரசிகர்கள் ஹார்ட்டினை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
News November 14, 2025
ராசி பலன்கள் (14.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 13, 2025
எந்த திசையில் தலைவைத்து படுப்பது நல்லது?

குறிப்பிட்ட சில திசைகளில் தலைவைத்து படுப்பது நல்லது என முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். அவை, கிழக்கு மற்றும் மேற்கு திசைகளாகும். குறிப்பாக கிழக்குப் பக்கம் பார்த்து தலை வைத்து தூங்குவது புகழை சேர்க்கும் என நம்பப்படுகிறது. வடக்கிலே தலை வைத்துப் படுத்தால் வம்சம் விருத்தியடையாது என்று முன்னோர்கள் சொல்லி இருக்கின்றனர். மேலும், தெற்கில் தலை வைப்பது படுப்பதும் நல்லது இல்லையாம்.


