News June 16, 2024

பிரதமரின் தமிழகப் பயணம் ஒத்திவைப்பு

image

ஜூன் 20ஆம் தேதி, பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை-நாகர்கோவில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கவும், சிலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி தமிழகம் வருவதாக நேற்று செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், அவரது பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News March 18, 2026

வெங்காயம் வாங்கும்போது இதை மறக்காதீங்க!

image

விலை குறைந்துள்ளது என்பதால் காய்கறிகளை வாங்கிக் குவிக்கிறீர்களா? அப்படியெனில், வெங்காயம் வாங்கும்முன் இந்த அனுபவ டிப்ஸை கவனியுங்கள். அதாவது பெரிய வெங்காயத்தை வாங்கும்போது சின்னதாக பார்த்து வாங்குங்கள். அதில் தான் சத்தும் உணவில் ருசியும் நன்றாக இருக்கும். சின்ன வெங்காயத்தை பெரிதாக பார்த்து வாங்குங்கள். அதை நறுக்கி சமைக்கும்போது உணவிலும் அதன் ருசி எதிரொலிக்கும். நீங்க எப்படி வெங்காயம் வாங்குவீங்க?

News March 18, 2026

₹6,500, ₹11,000.. புதிய அறிவிப்பு வந்தது

image

வேட்பாளர்கள் செய்யும் ஒவ்வொரு செலவுக்கும் வரம்பு நிர்ணயித்து, புதிய விலை பட்டியலை ECI வெளியிட்டுள்ளது. பிளாஸ்டிக் சேர் ₹11, குஷன் இருக்கை ₹165, வாழை குலை நட்டால் ஒன்றுக்கு ₹750, ஆயிரம் வாலா பட்டாசு வெடித்தால் ₹650, மேள தாளங்கள் வாசித்தால் ₹6,500, மயிலாட்டம் ₹11,000, சிறிய தண்ணீர் பாட்டிலுக்கு ₹7, வெஜிடபிள் ரைஸ் ₹50, வெரைட்டி ரைஸ் ₹50, சிக்கன் பிரியாணி ₹110, மட்டன் பிரியாணி ₹180.

News March 18, 2026

FLASH: தேர்தல் களத்தில் சசிகலாவின் அடுத்த மூவ்!

image

அபுமமுக கட்சியில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்பமனு பெறலாம் என சசிகலா அறிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள முகாம் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை விருப்பமனு வழங்கப்படும் எனவும், வரும் 22-ம் தேதி இரவு 7 மணிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். டெல்டா, தென் மாவட்டங்களில் 60 தொகுதிகளை சசிகலா குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!