News June 16, 2024
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அதன்படி இன்று இரவு 7 மணி வரை அரியலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News April 20, 2025
அரியலூர்: 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Digital Marketing Manager பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 – 25,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் <
News April 20, 2025
காட்டுப்பன்றிகள் மோதல்: ஒருவர் படுகாயம்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தைச் சேர்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் காசாளராக பணியாற்றி வருபவர் கண்ணன்(54). இவர் நேற்று காலை 10 மணியளவில் அலுவலகத்திற்கு தனது பைக்கில் சத்திரம் கிராமம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென 4 காட்டுப்பன்றிகள் ஓடி வந்து பைக் மீது மோதியது. இந்த விபத்தில் நிலைத்தடுமாறிய கண்ணன் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.
News April 19, 2025
மணிமேகலை விருது மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தகுதியான சுயஉதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகளுக்கும்,கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்கள், பகுதி கூட்டமைப்புகள் மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது என மணிமேகலை விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்