News June 16, 2024
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அதன்படி இன்று இரவு 7 மணி வரை திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News March 3, 2026
வீடு புகுந்து நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் பேர் கைது!

வேடசந்தூர் அருகே சண்முகம் என்பவரைத் தாக்கி, 5 பவுன் நகையைப் பறித்துச் சென்ற வழக்கில் மேல்மாத்தினிபட்டியை சேர்ந்த கதிர் மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட தங்க நகைகள், செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். குற்றவாளிகள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
News March 2, 2026
திண்டுக்கல்: சொந்த தொழில் தொடங்க SUPER வழி!

திண்டுக்கல் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <
News March 2, 2026
திண்டுக்கல்லில் இடதுசாரி கட்சிகள் ஆலோசனை!

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதை கண்டித்து, திண்டுக்கல் மணிக்கூண்டில் நாளை (மார்ச் 3) மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, திண்டுக்கல் சிபிஎம் அலுவலகத்தில் இன்று சிபிஎம், சிபிஐ மற்றும் சிபிஐ (எம்.எல்) உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆர்ப்பாட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.


