News June 16, 2024
தமிழ் சினிமாவுக்கு கை கொடுத்த அப்பா சென்டிமெண்ட்

தமிழ் சினிமாவில் அப்பா சென்டிமெண்ட்டை மையமாக வைத்து வெளியான பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’, ‘டான்’ ஆகிய படங்கள் தந்தைக்கும், மகனுக்குமான உறவை பேசும் வகையில் அமைந்திருந்தன. மகளுக்கும், தந்தைக்குமான உறவை ‘விஸ்வாசம்’, ‘தெறி’, ‘தங்கமீன்கள்’ ஆகிய படங்கள் படம் பிடித்து காட்டின. ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய படங்களும் ஹிட் லிஸ்டில் இணைகின்றன.
Similar News
News April 2, 2026
தருமபுரி சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

தருமபுரியில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.
News April 2, 2026
FLASH: தங்கம் விலை சவரனுக்கு ₹16,000 குறைந்தது

தங்கம் விலை இன்று மட்டும் <<19548468>>சவரனுக்கு ₹2,400<<>> குறைந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, கடந்த 1 மாத தங்கம் விலை நிலவரம் நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியாகவே அமைந்திருக்கிறது. அதாவது, மார்ச் 1-ம் தேதி 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹1,26,200 ஆக இருந்தது. தற்போது அது ₹1,10,000 ஆக குறைந்துள்ளது. வெள்ளி விலையும் பெருமளவு சரிந்து 1 கிலோ ₹2.55 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News April 2, 2026
எரிபொருள் தட்டுப்பாடு… WFH-க்கு மாறும் மலேசியா!

ஈரான் போரின் தாக்கம் பல ஆசிய நாடுகளில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கை, பாக்., உள்ளிட்ட பல நாடுகளில் எரிபொருள் விலையேற்றமும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வரும் ஏப்.15 முதல் அரசு ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய மலேசிய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஓரிரு வாரங்களில் போர் நிலவரம் சீரடையவில்லை எனில், நம் நாட்டிலும் இந்த தாக்கம் அதிகரிக்கலாம்.


