News June 16, 2024
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பது ஏன்?; ஈபிஎஸ்

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலை நடைபெற்றது. வாக்காளர்களை பட்டியில் அடைப்பது போல் அடைத்து திமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையம், அதிகாரிகள், காவல்துறையினர் திமுகவுக்கு துணையாக இருக்கின்றனர். மேலும், திமுக ஆட்சியில் சுதந்திரமாக மக்கள் வாக்களிக்க முடியாத நிலை உள்ளது. இதனால்தான் நாங்கள் விக்bகிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்” என அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் கூறியுள்ளார்
Similar News
News March 10, 2026
சென்னையில் கூண்டோடு கட்சி தாவல்!

சென்னை, OPS ஆதரவாளரான கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி கடந்த வாரம் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் நேற்று கொளத்தூர், வில்லிவாக்கம், ராயபுரம், திரு.வி.க.நகர், ஆர்.கே.நகர், பெரம்பூர் பகுதிகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்டோர், இவரது தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து, கட்சியில் இணைந்தனர்.
News March 10, 2026
சென்னை: கிணற்றில் குதித்த தந்தை- தூக்கில் மகள்!

சென்னை வடபழனி கங்கையம்மன் கோவில் பகுதியில் வசித்த ஆட்டோ ஓட்டுநர் கிருஷ்ணகுமார் (57), இளைய மகள் பாக்கியா (30) திருமணம் ஆகாததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 07.03.26 வீட்டை விட்டு சென்ற அவர், நேற்று கிணற்றில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். தந்தை இறந்த துக்கம் தாங்க முடியாமல் பாக்கியாவும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
News March 10, 2026
சென்னை: ஆட்டோ டிரைவருக்கு கத்திக்குத்து!

நெற்குன்றத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரசேகர் (47), நித்தின்காமேஷ் (22) என்பவரின் வீட்டிற்கு வெளியே தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, ஆட்டோவின் டயரில் காற்று இறக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த நித்தின்காமேஷ், சந்திரசேகரை கத்தியால் குத்தினார். இது தொடர்பாக கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


