News June 16, 2024

தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, அதிகபட்ச வெப்பநிலை 37-38°C இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Similar News

News March 10, 2026

செங்கல்பட்டு: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

செங்கல்பட்டு வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!

News March 10, 2026

BIG NEWS: தமிழக தேர்தல் தேதி.. புதிய அப்டேட்

image

TN உள்பட 5 மாநிலங்களில் உள்ள 824 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்.23-ம் தேதி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் தேதியை மார்ச் 15-ம் தேதி CEC அறிவிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. அப்போது, TN-க்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.

News March 10, 2026

புதிய கவர்னர் மார்ச் 12-ல் பொறுப்பேற்பு

image

தமிழகத்தின் தற்காலிக கவர்னராக நியமிக்கப்பட்ட ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மார்ச் 12-ல் பொறுப்பேற்கவுள்ளார். மக்கள் மாளிகையில் நடக்கும் நிகழ்வில் ராஜேந்திர விஸ்வநாத்துக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். கேரளத்தின் ஆளுநராக உள்ள அவர், தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிக்கவுள்ளார். முன்னதாக, TN கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி மேற்குவங்கத்தின் கவர்னராக மாற்றப்பட்டுள்ளார்.

error: Content is protected !!