News June 16, 2024

ரூ.2 கோடி கணக்கில் செம்மறி ஆடுகள் விற்பனை

image

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாகூரில் தர்கா குளம், தெரு பள்ளி, தைக்கால், மனோரா வடபுறம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் செம்மறி ஆடு விற்பனை நடந்து வருகிறது. புதுக்கோட்டை அறந்தாங்கி அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடுகள் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ.2 கோடியே 25 லட்சத்துக்கு விற்பனை ஆகி உள்ளது. இன்று அதிக விற்பனை நடக்கும் எனக் கூறப்படுகிறது.

Similar News

News August 28, 2025

நாகை மக்களே.. இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

image

நாகை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு நாகை மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04365-248121) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News August 28, 2025

நாகை மக்களே… இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

நாகை மக்களே..தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வீடு மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்ட இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 04365-253048 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். இதை SHARE பண்ணவும்!

News August 28, 2025

நாளை முழுவதும் ஆட்டோக்களுக்கு தடை

image

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நாளை (ஆக.29) நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, நாளை காலை முதல் இரவு 12 மணி வரை வேளாங்கண்ணி நுழைவாயிலான ஆர்ச் முதல் பேராலயத்தை சுற்றி உள்ள கடைகள், தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆட்டோக்கள் செல்வதற்கும் நிறுத்துவதற்கும் மாவட்ட காவல்துறையினர் தடை விதித்து உள்ளனர்.

error: Content is protected !!