News June 16, 2024
52 வயதில் 1,000 கி.மீ. ஓடி பெண் சாதனை

நடாலி டாவ் என்ற 52 வயதான மாரத்தான் வீராங்கனை தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் முழுவதும் 12 நாள்களில் 1,000 கி.மீ. ஓடி சாதனை படைத்துள்ளார். இடுப்பில் ஏற்பட்ட காயத்தையும், வெயிலில் ஷூக்கள் உருகியதையும் கூட பொருட்படுத்தாமல் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் மலேசியாவை வேகமாக ஓடி கடந்தவர் என்ற கின்னஸ் உலக சாதனையையும் அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 24, 2026
மோசமான சாதனை.. RCB தான் டாப்

2024-ல் RCB-க்கு எதிராக SRH 287 ரன்கள் குவித்ததே ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. 2017-ல் KKR-க்கு எதிராக RCB 49 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே குறைந்தபட்ச ஸ்கோராகும். குறைந்த ஸ்கோருக்கு அவுட்டான அணிகளின் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் RR, டெல்லி உள்ளன. RCB-க்கு எதிராக 58, 59 ரன்களுக்கு RR ஆல் அவுட்டாகி இருக்கிறது. 2017-ல் டெல்லி டேர்டெவில்ஸை 66 ரன்களுக்கு மும்பை இந்தியன்ஸ் சுருட்டியுள்ளது.
News March 24, 2026
PM மோடி – டிரம்ப் முக்கிய ஆலோசனை

மேற்காசியாவில் நிலவும் போர்ச்சூழல் பற்றி அதிபர் டிரம்ப், PM மோடி உடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது, கச்சா எண்ணெய் வர்த்தகத்திற்கு ஹார்முஸ் நீரிணை திறந்து இருப்பதன் முக்கியத்துவம் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, மேற்காசியாவில் அமைதி நிலவுவதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவளிக்கும் என டிரம்ப்பிடம் உறுதியளித்தாக X-ல் PM மோடி பதிவிட்டுள்ளார்.
News March 24, 2026
வங்கிக் கணக்கில் பணம்.. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு

EPFO-வில் உரிமை கோரப்படாமல் முடங்கிக் கிடக்கும் சுமார் ₹5,200 கோடி நிதியை சம்பந்தப்பட்டோரின் வங்கிக் கணக்கில் தானாக செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 55 வயதை கடந்த ஓய்வு பெற்றவர்களின் EPFO கணக்குகள் 3 ஆண்டுகளுக்கும் மேல் செயல்படாமல் இருந்தால் அவை செயலற்ற கணக்குகளாக கருதப்படும்.


