News June 16, 2024
நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்

ஏழைகளுக்கு, சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நீட் விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சைகள் சமத்துவமின்மையை காட்டுவதாக கூறிய அவர், தகுதியின் அளவுகோலாக கருதப்படும் நீட் சமூகத்தின் அனைத்து நிலைகளையும் பாதிக்கும் மோசடி என்று சாடினார். இத்தேர்வுக்கு எதிராக அனிதா முதல் எண்ணற்ற மாணவர்கள் உயிர் மாய்த்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.
Similar News
News March 4, 2026
9 லட்சம் கோடி ரூபாய் சரிந்தது.. அச்சச்சோ

மத்திய கிழக்கிலுள்ள போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் <<19293844>>பங்குச்சந்தை<<>> கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்று ஒருநாள் மட்டும் முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட ₹9.5 லட்சம் கோடியை இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. டாடா ஸ்டீல், Ultratech, இண்டிகோ போன்ற நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதே நேரத்தில், பாதுகாப்பு துறை பங்குகள் மட்டும் 5% – 13% வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 4, 2026
கடிதம் எழுதிவிட்டு தூங்க சென்றுவிடுவார் CM: விஜய்

மீனவர்கள் கைது செய்யப்பட்டால் PM-க்கு கடிதம் கொடுத்துவிட்டு மீண்டும் தூங்கச் சென்றுவிடுவார் ஸ்டாலின் என விஜய் கிண்டலடித்துள்ளார். மீனவர்கள் விவகாரத்தில் மானே, தேனே, பொன்மானே என கடிதம் எழுதாமல் உணர்வுப்பூர்வமான நடவடிக்கை தேவை என்ற அவர், தான் ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் மீது கைவைக்கவே முடியாது எனவும் உறுதியளித்துள்ளார். மேலும், திமுகவை மக்கள் வெறுத்துவிட்டதாகவும் கூறினார்.
News March 4, 2026
கூட்டுறவு கடன் முழுமையாக ரத்து… புதிய தேர்தல் அறிவிப்பு

மத்திய, மாநில அரசு வேலைகளில் இல்லாத குடும்பத்தினரின் குழந்தைகளின் மருத்துவம் பொறியியல் உள்பட அனைத்து கல்விச் செலவையும் அரசே ஏற்கும் என்று விஜய் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். 5 ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு கடன் முழுமையாக ரத்து, 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் 50% கடன் தள்ளுபடி செய்வது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.


