News June 16, 2024
T20WC: சூப்பர் 8-க்கு முன்னேறிய இங்கிலாந்து

உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்து அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின. இதில் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றால், இங்கிலாந்து அணி வெளியேறும் நிலை இருந்தது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், நெட் ரன்ரேட் அடிப்படையில், அந்த அணியும், இங்கிலாந்து அணியும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. முன்னதாக இந்தியா உள்ளிட்ட 5 அணிகள் தகுதி பெற்றன.
Similar News
News March 1, 2026
விஜய்யின் சொத்து இவ்வளவு கோடியா..!

விவாகரத்து மனுவில் சங்கீதா ஜீவனாம்சம் கோரிய நிலையில், விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு என SM-ல் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டு நிலவரப்படி, அவரது சொத்து மதிப்பு சுமார் ₹600 கோடி என TOI தெரிவித்துள்ளது. நீலாங்கரை பங்களா, 10 நிறுவனங்களின் விளம்பர தூதர், ரோல்ஸ் ராய்ஸ், BMW X5 & X6, Audi A8 L, Mercedes Benz GLA உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களும் இதில் அடங்கும்.
News March 1, 2026
USA, இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனம்: புடின்

கமேனியின் மறைவுக்கு ரஷ்ய அதிபர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியனுக்கு எழுதிய கடிதத்தில் அவர், இந்த படுகொலையை ’காட்டுமிராண்டித்தனமான செயல்’ என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அறநெறி மற்றும் சர்வதேச சட்டங்களை மீறி கமேனி கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் போரில் ஈரான் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது.
News March 1, 2026
ஜெயலலிதா படத்தை மாற்றியது ஏன்? OPS பதில்

திமுகவில் இணைந்த OPS தனது காரில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் போட்டோவை எடுத்துவிட்டு ஸ்டாலின் படத்தை வைத்துள்ளார். ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம் என சொன்னவர் பதவிக்காக இப்போது அவரை மறந்துவிட்டதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது. தற்போது திமுகவில் இணைந்திருப்பதால் ஸ்டாலினின் படத்தை வைப்பதில் தவறில்லை என பதில் அளித்துள்ளார்.


