News June 16, 2024
IMEC திட்டம் என்றால் என்ன? (3/3)

IMEC மூலம் சீனாவின் பெல்ட் & ரோடு திட்டத்திற்கு இந்தியா நேரடி சவால் விடுத்திருப்பதாகவே புவிசார் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் சீனாவின் திட்டத்தைப் போல் அல்லாமல், IMEC திட்டம் தொடர்ந்து முன்னேற்றமடைந்து வருகிறது. பொருளாதார ரீதியில் சீன மேலாதிக்கத்திற்கு இந்தியா வைத்திருக்கும் இந்த ராஜதந்திர ‘செக்’கால் சீனா ஆடிப்போயிருப்பதாகக் கூறப்படுகிறது .
Similar News
News March 2, 2026
ஈரானை திட்டமிட்டே தாக்கினாரா டிரம்ப்?

அணு ஆயுத ஒப்பந்தம் இறுதியாகும் தருணத்தில் USA தங்களது நாட்டை தாக்கிவிட்டதாக ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார். இதன் மூலம் சர்வதேச உறவுகளை டிரம்ப் அழித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். ஜெனிவா கூட்டத்தில் அணு ஆயுத ஒப்பந்தம் இறுதியாகியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, ஒப்பந்தத்திற்கு ஈரான் தயாராக இருந்தாலும் டிரம்ப் திட்டமிட்டே தாக்க உத்தரவிட்டதாக ஈரானிய ஊடகங்கள் சாடுகின்றன.
News March 2, 2026
No Bro., Why Bro? அண்ணாமலை

நேற்று CM ஸ்டாலின் தனது 73 பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு X தளத்தில் ராகுல் காந்தி வாழ்த்து கூறியிருந்தார். ஆனால் கடந்த ஆண்டு பயன்படுத்திய சகோதரர் வார்த்தை இம்முறை இடம்பெறவில்லை. இதுபற்றி தனது X பதிவில் விமர்சனம் வைத்துள்ள அண்ணாமலை, இந்தாண்டு சகோதரர் வார்த்தையை ராகுல் பயன்படுத்தாது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு DMK-CONG தொகுதிப் பங்கீடு சிக்கலே காரணம் என பாஜகவினர் கூறுகின்றனர்.
News March 2, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 625 ▶குறள்: அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும். ▶பொருள்: துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள், துன்பப்பட்டு அழிந்து விடும்.


