News June 16, 2024
பெற்றோர்களே OTP-ஐ ஆசிரியர்களிடம் சொல்லுங்க

தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளி மாணவர்களின் விவரங்களும் EMIS தளத்தின் மூலம் ஆன்லைனில் பராமரிக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் மதிப்பெண், பள்ளி சார்ந்த தகவல்கள் பெற்றோருக்கு SMS மூலம் தெரியப்படுத்தப்பட உள்ளது. இதற்காக பெற்றோரின் செல்போன் எண்களை சரிபார்க்க OTP அனுப்பப்படுகிறது. அச்சமடையாமல் பள்ளி ஆசிரியர் தானா என்பதை உறுதிப்படுத்திவிட்டு, பெற்றோர்கள் OTP எண்ணைப் பகிருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 13, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை: ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

போடிநாயக்கனூர், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் ‘உடன்பிறப்பே வா’ என்ற ஒன்-டூ-ஒன் ஆலோசனையை CM ஸ்டாலின் இன்று மேற்கொண்டார். அப்போது, விடுபட்டவர்களில், தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை பெற்றுத் தர திமுகவினர் உதவ வேண்டும் என ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிப்போருக்கு திமுகவினர் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
News November 13, 2025
இந்தியர்களின் சிரமத்தை போக்கிய ஒற்றை லெட்டர்!

ரயில் பயணத்தின் போது, கழிப்பறை இல்லாத நிலையை யோசித்து பார்க்க முடியுமா? 1909-க்கு முன், நாட்டில் ரயில்கள் அப்படிதான் இருந்துள்ளன. மக்கள் ஸ்டேஷன் கழிப்பறையையே பயன்படுத்தி உள்ளனர். அப்படி, கழிப்பறையை பயன்படுத்த சென்ற சந்திரா சென் என்பவர், ரயில் புறப்பட்டதால் வேட்டியை சரியாக கட்டாமல் ஓடிவந்து, பெரும் அவமானத்தை சந்தித்துள்ளார். அவர் அன்று ரயில்வேக்கு எழுதிய லெட்டர் தான், கழிப்பறையை கொண்டுவந்துள்ளது.
News November 13, 2025
2-வது சிம்பொனியை அரங்கேற்றும் இளையராஜா

‘ராஜாவுக்கெல்லாம் ராஜா இந்த இளையராஜா’ என்று ரசிகர்கள், தலைமுறை தாண்டியும் உருகி வருகின்றனர். இதனிடையே, தனது முதல் சிம்பொனியை, லண்டனில் உள்ள Eventim Apollo Theatre-ல் இளையராஜா அரங்கேற்றம் செய்தார். இதன்மூலம், ஒட்டுமொத்த இசை உலகையே தமிழகத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்தார். இந்நிலையில், தனது 2-வது சிம்பொனியை நவ.17-ல் ஹங்கேரியில் உள்ள Eötvös Loránd University-ல் அரங்கேற்றம் செய்யவுள்ளார்.


