News June 16, 2024
திமுகவை வீழ்த்த வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்த 3 முறை வாய்ப்பு கிடைத்தும் அதை சீர்குலைத்தது திமுக என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல், சமூகநீதியை வென்றெடுப்பதற்கான போர் என்று குறிப்பிட்டுள்ளார். திமுகவை வீழ்த்தினால் தான் அடுத்தத் தேர்தலுக்கு முன்பாகாவது வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முன்வருவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 3, 2026
தூத்துக்குடி : இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

தூத்துக்குடி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News March 3, 2026
ஈரான் அரசு என்னை கொன்னுடும்.. பயத்தில் நடிகை!

பிரபல ஈரானிய நடிகை எல்னாஸ் நோரூசி, ஈரான் அரசாங்கம் தன்னை கொன்றுவிடும் என்ற அச்சத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். கமேனி மரணமடைந்ததை கொண்டாடிய அவர், அந்நாட்டின் அரசு கவிழும் வரை அங்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். ஈரானில் பிறந்த நோரூசி, 8 வயதில் வெளியேறி ஜெர்மனியில் தஞ்சமடைந்தார். தற்போது இந்தியாவில் வசித்து வரும் அவர், ‘Sacred Games’ உள்பட பல இந்திய மொழி படங்கள், வெப் தொடர்களில் நடித்துள்ளார்.
News March 3, 2026
கேவலம்: சஞ்சுவுக்கு எதிராக இனவெறி கருத்து!

WI அணிக்கு எதிரான வாழ்வா? சாவா? ஆட்டத்தில் இந்திய அணியை சஞ்சு சாம்சன் கரைசேர்த்தார். அவரை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடி வரும் நிலையில், X தளத்தில், கருப்பானவரால் தான், கருப்பினத்தவர்களை வீழ்த்த முடியும் என மிகவும் கேவலமான ஒருவர் பதிவிட்டிருந்தார். இந்திய ரசிகர்கள் பலரும் அவரை கடுமையாக கண்டித்த நிலையில், அப்பதிவு தற்போது டெலிட் செய்யப்பட்டுள்ளது. இவர்களையெல்லாம் என்ன செய்வது?


