News June 16, 2024

கமென்ட்டை நீக்கிய திமுக எம்எல்ஏ

image

திருச்சி லால்குடி தொகுதி திமுக எம்எல்ஏ செளந்தரபாண்டியன், அமைச்சர் கே.என்.நேரு தன்னை புறக்கணிப்பதாக நேற்றைய தினம் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அத்துடன், அமைச்சரின் பேஸ்புக் பக்கத்தில், தான் இயற்கை எய்திவிட்டதாகவும், தொகுதி காலி என அறிவிக்கப்பட்டதாகவும் அவர் பதிவிட்டிருந்தார். இவ்விவகாரம் பூதாகரமான நிலையில், அந்த சர்ச்சைப் பதிவை தற்போது அவர் நீக்கிவிட்டார்.

Similar News

News March 11, 2026

Fridge-ல் மறந்தும் இவற்றை வெச்சுராதீங்க..

image

பொதுவாக காய்கறிகள், சமைத்த உணவுகளை Fridge-ல் வைத்து பயன்படுத்துவோம். எதை வைக்கலாம், எதை வைக்கக்கூடாது என்பது கூட தெரியாமல், பல நாள்களுக்கு வைத்திருந்து பயன்படுத்துவோம். ஆனால், சில உணவுகளை Fridge-ல் கண்டிப்பாக வைக்கவே கூடாது. அவை என்னென்ன பொருள்கள் என்பதை தெரிந்து கொள்ள, மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe பண்ணி பாருங்க. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 11, 2026

வங்கி கணக்கில் மேலும் ₹1,000.. ரங்கசாமி அறிவித்தார்

image

புதுச்சேரியில் மார்ச் 9-ம் தேதி குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ₹5,000 உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ₹1,000 வழங்கும் திட்டத்தை CM ரங்கசாமி அறிவித்துள்ளார். அதன்படி, புத்தகப் பை, காலணி வாங்குவதற்காக 80,000 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, பெற்றோர்களின் வங்கி கணக்கில் ₹1,000 டெபாசிட் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கும் இத்திட்டம் வேண்டுமா?

News March 11, 2026

BIG NEWS: பெட்ரோலுக்கும் தட்டுப்பாடா.. அடுத்தடுத்து ஷாக்

image

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்னையால் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்நிலையில், தமிழகத்தின் பெட்ரோல் கையிருப்பு இம்மாதம்(மார்ச்) வரை மட்டுமே இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பெட்ரோல் தட்டுப்பாடு தற்போதுவரை இல்லை எனக் குறிப்பிட்ட அவர், அச்சம் காரணமாகவே பலரும் பெட்ரோலை கேன்களில் வாங்கி கையிருப்பு வைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த பிரச்னை எப்போது முடியுமோ?

error: Content is protected !!