News June 16, 2024
தக்காளி விலை ₹80ஆக உயர்வு

விளைச்சல் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் இன்று சில்லறை விற்பனையில் கிலோ ₹80க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கெனவே, கர்நாடகா, ஆந்திராவில் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதனால், விரைவில் விலை ₹100ஐ தொடலாம் என்றும் கூறப்படுகிறது. வரத்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப மேலும் சில வாரங்கள் வரை ஆகும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
Similar News
News March 2, 2026
வங்கிக் கணக்கில் ரூ.2,000.. அரசு புதிய அறிவிப்பு

PM KISAN திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ₹2,000 வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒவ்வொரு விவசாயியும், விவசாய <<19194432>>அடையாள எண்<<>> பெற்றிருப்பது அவசியம். இதற்கு, தேவையான நில ஆவணங்கள், ஆதார் எண், வங்கிக் கணக்கு, மொபைல் எண் ஆகியவற்றை வேளாண் அலுவலகங்களில் கொண்டு சென்று விண்ணப்பிக்கலாம். இதன்பிறகே, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தவணைத் தொகை ₹2,000 செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
News March 2, 2026
பெரிதாகும் போர்.. ஈரானுடன் கைகோர்த்த ஹிஸ்புல்லா

ஈரானுக்கு ஆதரவாக போரில் களமிறங்கிய ஹிஸ்புல்லா அமைப்பினர், நள்ளிரவில் லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் இத்தாக்குதலை முறியடித்துவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. 2024 நவம்பரில் USA சமரசம் செய்ததால் இஸ்ரேல்-லெபனான் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. அதன்பிறகு, இஸ்ரேலை ஹிஸ்புல்லா தாக்குவது இதுவே முதல் முறையாகும்.
News March 2, 2026
ஊழலுக்காக கலைக்கப்பட்ட திமுக அரசு: EPS

தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக CM ஸ்டாலின் தொடர்ச்சியாக கூறும் நிலையில், அதை EPS மறுத்துள்ளார். மோடி பொறுப்பேற்றதில் இருந்து தமிழக வளர்ச்சிக்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய அரசு மீது அவதூறு பிரசாரத்தை திமுக பரப்புவதாக சாடிய EPS, ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு தான் என்றும் விமர்சித்தார்.


