News June 16, 2024
திருப்பத்தூர்: ஓய்வூதியர் குறைதீர் முகாம்

அஞ்சல் துறையில் ஓய்வூதியம் பெறும் அஞ்சல், ரயில்வே, தொலைபேசி துறைகளின் ஓய்வூதியதாரர்களுக்கான குறைகள் ஏதேனும் இருப்பின் தெரிவிப்பதற்காக குறைதீர் முகாம் மேற்கு மண்டல அலுவலகத்தில் வரும் ஜுலை 3-ஆம் தேதி காணொலி மூலம் நடைபெற உள்ளது. எனவே, ஓய்வூதியதாரர்கள் நிவர்த்தி செய்ய முடியாத குறைகளை முழு விவரத்துடன் எழுதி திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட அலுவலகத்துக்கு வரும் 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
Similar News
News August 28, 2025
திருப்பத்தூரில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

திருப்பத்தூர் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இதற்காக அரசு சிறப்பு முகாமை துவக்கியுள்ளது. <
News August 27, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து போலீசார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 27) இரவு 10 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட போலிஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
News August 27, 2025
திருப்பத்தூரில் அமெரிக்கா விதித்த வரியால் வேலை இழப்பு

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல தோல் தொழற்சாலைகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் 300க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.100 கோடி ஏற்றுமதி பாதிக்கும் என கூறப்படும் நிலையில் லட்சக்கணக்கானோர் வேலை இழப்பார்கள் என தொழிற்துறை வல்லுனர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.