News June 16, 2024
வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை உயர்த்திய SBI

SBI அதன் கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி உள்ளது. இந்த மாற்றங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்ததால், கடனுக்கான தவணைத் தொகை அதிகரிக்கும். ரெப்போ வட்டி விகிதம், வங்கிகளின் செயல்பாட்டு செலவுகள், லாபம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒவ்வொரு வங்கியும் MCLR விகிதத்தை மாற்றி அமைக்கின்றன. இந்த விகிதத்தை பொறுத்தே வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது.
Similar News
News March 10, 2026
ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சிகள் நெருக்கடி

சென்னை மண்டலத்திற்குட்பட்ட தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது. பிரேமலதா தனக்காக விருகம்பாக்கம் தொகுதியை கேட்பதால், முடியாது எனக்கூற முடியாமல் திமுக தவிக்கிறதாம். அதேபோல், பெரம்பூர் அல்லது மதுரவாயல் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூ., ஆர்.கே.நகர் தொகுதியை விசிகவும் கேட்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் 1 தொகுதியை மட்டுமே கூட்டணிக்கு திமுக ஒதுக்கியது.
News March 10, 2026
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த கசாயம் அவசியம்!

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இலவங்கப்பட்டை – கிராம்பு கசாயம் குடிக்க சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ➤தேவையானவை: இலவங்கப்பட்டை – கிராம்பு , தேன்/ பனங்கற்கண்டு ➤செய்முறை: இலவங்கப்பட்டை – கிராம்பு இரண்டையும் இடித்து, தண்ணீரில் போட்டு 3- 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். பிறகு வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து பருகலாம். இந்த அவசியமான தகவலை அனைவருக்கும் பகிருங்கள். SHARE.
News March 10, 2026
சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் சரிவு!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. நேற்று காலை வர்த்தகத்தில் <<19333418>>பெரிய அளவில் குறைந்து<<>> மீண்டும் மாலை நேர வர்த்தகத்தில் 1 அவுன்ஸ் $5,170-ஐ கடந்தது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி $35 டாலர்கள் குறைந்து $5,135 ஆக உள்ளது. அதேநேரம், வெள்ளி விலை 1 அவுன்ஸ்-க்கு $3 உயர்ந்து $88 ஆக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், இந்திய சந்தையில் இன்று வெள்ளி விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது.


