News June 16, 2024
மதுரை-பெங்களூரு ஆரஞ்சு நிற வந்தே பாரத்!

மதுரை – பெங்களூரு ஆரஞ்சு நிற வந்தே பாரத் ரயில் சேவை வரும் 20ஆம் தேதி தொடங்க உள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது. சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து காணொளி காட்சி மூலம் இந்த புதிய ரயில் சேவையை துவக்கி வைக்க உள்ளார். முதன் முதலாக மதுரையிலிருந்து பெங்களூரு செல்ல கூடிய நேரடி ரயில் சேவை இதுவே ஆகும்.
Similar News
News March 2, 2026
JUSTIN: தி.குன்றம் தீபம் விவகாரம்; பொதுமன்னிப்பு கேட்ட ஆட்சியர்!

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் பொதுமன்னிப்பு கேட்பதாக மதுரை ஆட்சிய பிரவீன் குமார் தெரிவித்தார். சட்டத்தை செயல்படுத்த வேண்டியது நிர்வாகத்தின் கடமை, சட்டத்தை கடைப்பிடித்து வருகின்ற பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறேன் என ஆட்சியர் தரப்பில் விளக்கம்.
News March 2, 2026
குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

மதுரை பொதும்பு அருகே கோவில் பாப்பாகுடியை சேர்ந்தவர் பாலமுருகன்(35). இவருக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆன நிலையில் குழந்தை இல்லை. இந்த மன அழுத்தத்தில் குடி போதைக்கு அடிமையானார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் மனைவி திவ்யா(26) கொடுத்த புகாரில் அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News March 2, 2026
மதுரை : இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

மதுரை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!


