News June 16, 2024
மது பாட்டில்கள் பறிமுதல்

அரியலூர் அடுத்த சிறுவளூர் கிராமத்திலுள்ள மேம்பாலத்தின் கீழ் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் மது விற்பனை செய்தவர் மது பாட்டிலை போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார். இதில் 31 மது பாட்டில்கள், ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 14, 2026
அரியர்லூர்: பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த விசிகவினர்

செந்துறையில் வருகிற 15ஆம் தேதி விசிக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனந்தவாடி கிராமத்தில் விசிகவினர் “இல்லம் தோறும் திருமா’’ எனும் தலைப்பின் கீழ் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இந்நிகழ்வில், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொகுதி மாவட்ட செயலாளர் அன்பானந்தம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
News March 14, 2026
அரியலூர்: கடைக்குள் புகுந்த லாரி

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்டான் சோழபுரம் பஸ் நிறுத்தம் அருகே, நேற்று அதிகாலை சசிக்குமார்(34) எனவர் லாரி ஓட்டி வந்துள்ளார். அப்போது சாலையில் உயரமான வேகத்தடை இருப்பதை கண்டு பிரேக் பிடித்த அவர், முன்னால் சென்ற பஸ் மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பிள்ளார். இதில், லாரி சாலியோரம் உள்ள கடை மீது நின்றது. இதில், கடை சேதமசைந்தது. ஒஇன் அக்கம்பத்தினர். லாரி ட்ரைவர் மீட்டனர்.
News March 14, 2026
அரியலூர்: வீட்டு வாளியில் பிணமாக கிடந்த குழந்தை

அரியலூர், குழுமூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் மதிவண்ணன், திவ்யா. திவ்யாவுக்கு நேற்று வயிற்று வலி இருந்ததால் அவரது கணவர், திட்டக்குடியில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு குழந்தை பிறந்ததற்கான வாய்ப்பு உள்ளதாக குழுமூர் சுகாதார நிலையத்தில் தகவலளித்தனர். அதன்பேரில் வீட்டில் சென்ற பார்த்ததில் கூடையில் பிறந்து இறந்த நிலையில் ஆண் குழந்தை இருந்து தெரியவந்தது.


