News June 16, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்!

*பாஜகவால் ஒருபோதும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாது – திருமாவளவன்
*இயக்கத்தில் இருக்கும் 10,020 பழைய பேருந்துகள் அகற்றப்படும் – எஸ்.எஸ்.சிவசங்கர்
*உலகளவில் 4ஆவது பெரிய சந்தையாக மும்பை பங்குச் சந்தை உருவெடுத்துள்ளது.
*காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய வீரர்கள் 8 பேர் உயிரிழப்பு
*டி20 உலகக் கோப்பை: இந்தியா – கனடா ஆட்டம் மழை காரணமாக ரத்தானது
Similar News
News November 13, 2025
எங்கு பார்த்தாலும் Content Creator-கள் தான்!

இந்தியாவில் தற்போது 14- 24 வயதுக்குட்பட்ட Gen Z தலைமுறையினரில் சுமார் 83% பேர் Content Creator-களாக மாறி இருக்கிறார்களாம். 93% பேர் தங்களுக்கு பிடித்த விஷயங்களை குறித்து தொடர்ந்து யூடியூப்பில் பார்த்து வருவதாகவும், 87% பேர் ஏதாவது ஒரு யூடியூப் பக்கத்தின் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், 78% பேர், யூடியூப்பில் யாரோ ஒருவர் பேசுவதை கேட்டு கொண்டிருக்கிறார்களாம்.
News November 13, 2025
RCB அணியை வாங்குகிறதா ஹோம்பாலே பிலிம்ஸ்?

நடப்பு IPL சாம்பியன் RCB அணி ஏலத்திற்கு வந்துள்ளது. அந்த அணியை யார் வாங்குவார் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ், RCB அணியை வாங்க முயற்சிகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. KGF, காந்தாரா படங்களை ஹோம்பாலே பிலிம்ஸ் தான் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படி ஹோம்பாலே பிலிம்ஸ் RCB-ஐ வாங்கினால் அந்த அணிக்கு என்ன பெயர் வைக்கலாம்’னு சொல்லுங்க?
News November 13, 2025
சென்னையில் நீதிபதி மீது செருப்பு வீச முயற்சி

சென்னை 5-வது கூடுதல் நீதிபதி மீது செருப்பு வீச முயன்ற கைதி கருக்கா வினோத்தை போலீஸார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான <<18268747>>கருக்கா வினோத்துக்கு<<>>, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தி.நகர் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில் ஆஜரானபோது வினோத், இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.


