News June 15, 2024
சவுக்கு சங்கர் ஜாமின் மனு தள்ளுபடி

கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கர் முதல்முறை ஜாமின் கோரிய வழக்கு அவரது தரப்பில் வாபஸ் பெற்ற நிலையில், தற்போது 2ஆவது முறையாக ஜாமின் கோரிய வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்!

திமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுதீஷ், வேட்பாளர் யார் என்பதை பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என தெரிவித்தார். சட்டமன்ற தொகுதிகள் பங்கீடு குறித்த அறிவிப்பு இன்னும் ஒருவாரத்தில் தெரியவரும் எனவும் கூறியுள்ளார். அதேசமயம் ராஜ்யசபா சீட் சுதீஷுக்கு ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
News March 3, 2026
காங்கிரஸை சீண்டிய திமுக அமைச்சர்!

தேர்தலில் திமுக தனி மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைக்கும் என ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் பேசிய அவர், திமுகவுடன் இருந்தால்தான் சட்டப்பேரவைக்குள் நுழைய முடியும் என்பது காங்கிரஸ் தலைமைக்கு தெரியும் என்றும், அந்த அந்தஸ்தை இழக்க அவர்கள் விரும்பமாட்டார்கள் எனவும் தெரிவித்தார். <<19287048>>தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிக்கும் நிலையில்<<>>, காங்கிரஸை சீண்டும் வகையில் ரகுபதி பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
News March 3, 2026
பள்ளி மாணவி கர்ப்பம்.. சிறுவன் சிக்கினான்

புத்தகப் பையை சுமக்கும் வயதில், வயிற்றில் குழந்தையை சுமப்பது எத்தகைய கொடுமை? சிவகங்கையில் +1 மாணவியை கிஷோர் என்ற சிறுவன், பிரவீன், சாமியார் ராமநாதன் ஆகிய 3 பேரும் ரேப் செய்துள்ளனர். இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவி ஹாஸ்பிடல் சென்றபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. பெற்றோர் அளித்த புகாரில் மூவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளான்.


